Srikrishnan Ku's photo.

"இன்னுமா இங்கு..லயர்ட்டெஸ் -விரைந்து ஏறு..காற்று வசதியாக உன் கப்பலின் பாய்மரத்தை நகர்த்துகிறது.,,அனைவரும் உனக்குத்தான் காத்திருக்கிறார்கள்.மீண்டும் உனக்கு என் ஆசிகள்!வாழ்க்கை பற்றிய சில சிந்தனைகள் உன் சிந்தையில் புகட்டும்-நினைக்கும் எல்லாவற்றையும் பேசிவிடாதே.நினைப்பதையெல்லாம் செயல்படுத்தவும் துணியாதே.அனைவருடனும் நட்பு பாராட்டு-ஆயினும் எவருடனும் மிகையாக பழகவேண்டாம். நட்பின் நம்பிக்கையைப் பரிசோதித்...து உண்மையானவர்களை நெஞ்சோடு ஒட்டிக்கொள்.பார்க்கும் எல்லோருடைய கரங்களையும் குலுக்கி வீணடிக்காதே.சண்டை ஏதும் நீயாகத் துவங்காதே-ஆயினும் வந்துவிட்டால் எதிராளி உன் வலிமைக்கு கட்டுப்படட்டும்.
அனைவரது சொற்களையும் செவிமடு-அனால் சிலரிடமே உன் சொற்களைக் கொடு.பிறர் கருத்துக்களைக் கேள்-ஆனால் தீர்ப்பு மட்டும் உன்னோடே இருக்கட்டும்.உனது ஆடைகளுக்கு நன்கு செலவழி-பகட்டை விடவும் நேர்த்தியாக அவை இருக்கட்டும்-ஏனெனில் ஆடையே ஒருவனை அடையாளம் காட்டுகிறது.-அதுவும் நீ செல்லும் பிரான்சில் மிக மிக அவசியம் அது.ஒருபோதும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதே..நண்பனுக்கு உதவப்போய் நட்பையும் பொருளையும் சேர்த்து இழந்துவிடாதே.கடன்பழக்கமோ செலவாளியாக்கிவிடும்.--அனைத்தையும்விட நீ உனக்கு உண்மையாய் இரு-அப்போதுதான் எவருக்கும் நீ பொய்யனாய் வெளிப்பட மாட்டாய். சென்று வா மகனே-என் ஆசிகள் நான் சொன்ன சொற்களை உன்னால் உள்வாங்கிக்கொள்ள உதவும்" ..
Shakespeare's . ஹேம்லட் நாடகத்தில் பொலோனியஸ் மகனுக்கு கூறிய அறிவுரை.-

Comments

Popular posts from this blog