காட்டுக்குத் துரத்தி அடிக்கப்பட்டு என்னோடு வாழும் தோழர்களே-சகோதரரே-இவ்வரிய காட்டு வாழ்க்கை நம் அரசபோக படாடோப வாழ்க்கையைவிட இனிமையாக இருக்கிறது அல்லவா?இம்மரங்களிடம் ஏது அரசவை காழ்ப்புணர்ச்சிகளும் ,சதித்திட்டங்களும்?இக்காட்டிடை நாம் பருவ மாற்றங்களை நன்கு உணர்கிறோம்-நம்மை அவை பாதிப்பதில்லை.பனிக்கட்டிப் பொழிவுகள் , உறுத்தும் காற்றின் கடிகள் -அடிகள் என் மீது விழுந்தாலும்-என் உடல் குளிரில் நடுங்கினாலும...், என்னால் கால நிலையின் இயக்கத்தைப் பாராட்டமுடிகிறது.சிரித்தவாறே என் சிந்தனை இப்படிச் செல்கிறது: நன்றி உரித்தாகுக-நல்ல காற்றுக்கு-என்னை அவை துதித்துப் பாடாது;எனக்கு அறிவுரைகூறி என்னையே உணரவைக்கும் நல்லாசிரியன் போன்று;தீமைமிகு காலமும்கூட நன்மையையும் பயக்கும்-எப்படி கோரவடிவமுள்ள தேரை தன் தலையில் ஒளிவீசும் கற்களைக் கொண்டுள்ளதோ-அதுபோல்!இவ்வரிய வாழ்க்கை-நாகரிக உலகினின்று வெகு தொலைவில் இருந்தாலும்-இம்மரங்களின் மொழியைக் கேட்கமுடிகிறது,ஓடிவரும் ஓடைகளில் நூல்வரிகளைப் படிக்கமுடிகிறது,பாறைகள் பகர்ந்திடும் ஞானச் சொற்களை செவிமடுக்கமுடிகிறது-மேலும் நல்லன எல்லாம் காட்டும் அனைத்துப் பொருட்களையும் கண்டுகொள்ளமுடிகிறது".--அஸ் யு லைக் இட்.(ஷேக்ஸ்பியர் )-ஆக்ட் ஒன்று-காட்சி ஒன்று.


Comments

Popular posts from this blog