Twelfth Night by William Shakespeare.

ஆர்சினோ,கியூரியோ மற்ற பிரபுக்கள் வருகை-இசைக்கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருக்க-

ஆர்சினோ:இசையே காதலுக்கு விருந்தாகும்-நன்கு பாடுங்கள்-எனக்கு அதிகமாகவே வேண்டும்-
அளவுக்கு மிஞ்சி, நானே போதுமென்று சொல்லும்வரை---அந்த ராகத்தை மீண்டும் பாடுக-என்ன
சோகம் ததும்பி! என் செவியில் தேனாய் இனிது கேட்கிறதே!கரையோர வயலெட் மலர்களின் மணம் போல்-
மென் மேலும் எடுத்தும், கொடுத்தும் -போதும் போதும் -முன்பிருந்த இனிமை இப்போதில்லையே-
காதல் தான் எத்தகைய விரைவில் மாறும் தன்மை கொண்டது!ஒரு நேரம் இனிக்கவும்,மறுபொழுது
சலிக்கவும் செய்கிறதே!மிகப்பெரிய கடல்போல் விரிந்தும் -அதுவே எதுவும்கூடத் புகாமலும் இருப்பது விந்தையே!
உயர்ந்துகொண்டே வந்தும் பின்னர் ஒன்றுமே இல்லாதுபோவதும் ஒரு நொடியில்!பற்பலவடிவங்கள் உடையதுதான்  கற்பனை -அதுவே ஜாலம் பல செய்யும் எதையும் அதனுடன் ஒப்பிடமுடியாது.
கியூரியோ:வேட்டையாடச் செல்லலாமா, பிரபுவே?
ஆர்சினோ:எதையென்று சொல், கியூரியோ.
கியூரியோ:மானைத்தான்
 ஆர்சினோ: அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் -என் இதயமானைத்தான் வேட்டையாடுகிறேன் , முதன்முதலில் ஒலிவியாவைப் பார்த்தபோது ,அவளைச்சுற்றியுள்ள காற்றுமண்டலமே நறுமணம் வீசத் தொடங்கிற்று, நானே மானானேன்.என் ஆசைகளெல்லாம் கொடூரமான
வேட்டைநாய்களாக மாறி, அவளைநோக்கி விரட்டத்துவங்கின.
வாலெண்டின் உள்ளே வருகிறான் -

ஆர்சினோ:ஏய்--என்ன தகவல் அவளிடமிருந்து?...

வாலெண்டின்:மன்னிக்கவும்பிரபுவே-எனக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.--அவளது பணிப்பெண் தான் இந்தப் பதிலை எனக்களித்தாள்.
ஒலிவியா இன்னும் ஏழாண்டுகள்-வானத்தைக்கூடப் பார்க்காமல் மறைந்துகொள்வாளாம் ,ஒரு கன்யா ஸ்த்ரீயைப் போல்..நடந்து சென்றால்கூட ,முகத் திரை அணிந்து செல்வாளாம் .தனது அறையைக் கண்ணீரால் நனைப்பாளாம்.--இதையெல்லாம் அவளது மறைந்த சகோதரனுக்காகவாம் -அவன் நினைவைப் போற்றுகின்றவகையிலாம்..

ஆர்சினோ; ஓ ,அவளது இதயம்தான் எத்தகையது !-இப்படியெல்லாம் சகோதரனுக்காக நினைவுக்கடன் நிகழ்த்த! அங்கனமாயின்-அவளது பாசத்தையெல்லாம் தகர்தெறியப்போகும் -அவளது குடல்,மூளை,இதயம் அனைத்துள்ளும் செல்லப்போகும் எனது பொன்னிறமான அம்புகள் பாய்ந்தால்!..அவளுக்கு இனிமையான முழுமையே அதற்குப்பின்!  என்னை மலர்கள் நிரம்பியுள்ள தோட்டத்திற்கு அழைத்துச்செல்லுங்கள் ,,எங்கே மலர்களே குடையாய்க் கவிழ்ந்து விரிந்து மறைத்தால், அன்பே உயர்ந்து நிற்கும்.

Comments

Popular posts from this blog