குண்டக்க மண்டக்க ... மதுரைக்காரர்களோடு பல ஆண்டுகள் பழகி வந்ததால் நம்மவர்கள் பேசும் விதம் பற்றியும் வேறு என்னைக் குலுக்கிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பாம்பென்றும் சொல்லமுடியாது..பழுதென்றும் எடுத்துக்கொள்ளமுடியாது சிலரின் சொற்ப்ரயோகங்களை வைத்து..கலெக்டர் அலுவலகத்திலிருந்து-ராஜாஜி மருத்துவமனை வந்துவிட்டு, ஷெனாய்நகர் ,மதிச்சியம் வழியாகத் திரும்பிப் போகும்-ஒரு பெரிய பாத்திரத்தில் சுண்டல் விற்றுப் பிழைப்பை நடத்தும் ஒரு டிபிக்கல் மதுரை ஆசாமி எங்கள் நண்பர் குழாத்துக்குப் பரிச்சயமானார்-அடிக்கடி எங்களுக்கு சுண்டல் விற்கப்போய் . அவர் பூணூல் அணிந்திருப்பார் -அந்தக் கால வழக்கப்படி-விற்பதற்கு அந்த அடையாளமெல்லாம் தேவைப்பட்டதே!அவரை அடிக்கடி சீண்டிப் பார்ப்பதில் எனது நண்பர் ஒருவர்க்கு வழக்கம்-கும்பலாகப் பழகினால் இந்தமாதிரியெல்லாம் ரகளை பண்ணுவது இன்றும் உண்டே..ஒருநாள் அவரிடம் எனதுநண்பர்-'ஆமாம் ஓய் -கயிறு போட்டிருக்கிறீரே -இதன் அர்த்தமெல்லாம் தெரியுமா?' என்று சீண்ட அன்று இருந்த கடுப்பில் அந்த சுண்டல் விற்கிறவர்-" "ஒய்-உமக்கு உங்க அப்பா தான் அப்பா...
Posts
- Get link
- X
- Other Apps
நான்மாடக் கூடல் நகரின் மையத்தில் மீனாட்சி கோயில் மட்டுமல்ல --அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் கூடலழகர் கோயிலும் இருப்பது சிறப்பல்லவா?பெரிய கோயில் என்றும் சொல்லமுடியாது-சிறிய கோயில் என்றும் கூறமுடியாது-பெருமாள் இங்கு உறையும் அழகுமிகு கூடலழகர் ஆலயத்தை. எதிரே மண்டபமும் ஸ்ரீ ஹயக்ரீவருக்கான சிறிய ஆலயமும்.எந்நேரமும் விஷ்ணு பக்தர்கள் ஏராளமான வடநாட்டு யாத்திரிகர்கள் வந்த வண்ணம் இருக்கும் சிறப்புமிகு ஆலயம். வாயிலில் யானையைச் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தவுடன்-துவிஜஸ்தம்பம்-தரையில் விழுந்து சேவித்துவிட்டு-அருகே இருக்கும் தும்பிக்கை ஆழ்வார் தரிசனம். பெருமாள்கோயிலாதலால் முதலில் தாயாரைத் தரிசிக்க இடப்புறம் வாயிலைக் கடந்து ஸ்ரீ சக்கரத் தாழ்வார் சன்னதியில் மனமுருகப் பிரார்த்தனை-" சஹ்ராதித்ய சங்காஸம் சஹஸ்ர வதனம் ப்ரபும்" -அப்படியே அவருடன் இணைந்த ஸ்ரீ யோக நரசிம்மரய்த் துதித்த வண்ணம் வலம் வருகிறோம்-எப்படிப்பட்ட எதிரிகளும் நமக்குத் தீமை செய்யாவண்ணம் இவர்கள் உபாசனை உதவுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்-எதிரிகள் எனில்-காரணமே இல்லாமல் நம்மை பயமுறுத்தும் எண்ணங்களைத் தான்...
- Get link
- X
- Other Apps
ஒருமுறை மதுரைக்கு கிழக்கே வரிச்சூர் என்ற கிராமத்திற்கு பள்ளி ஸ்கவுட்ஸ் கேம்ப் -க்காகச் சென்றிருந்தோம்.மாலை ஐந்தாகி விட்டது.சிறிய அழகிய கிராமம்.மெல்ல நடந்து ஒரு சிறிய குளத்தை அடைந்தோம்.நிறைய மரங்கள் சூழ்ந்து மறையும் சூரிய ஒளியில் குளத்துத் தண்ணீர் வர்ணஜாலங்களை வாரி இறைத்த காட்சியில் மனதை பறிகொடுத்தோம்.கூட்டுக்குத் திரும்பிய பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஆயிரக் கணக்கில் கூடி பல்வேறு ஒலி வகைகளை எழுப்பி எங்களால் வேறு எதன்மீதும் கவனம் வைக்க முடியாமல் மெய் மறந்து நின்றோம்.பல நாட்கள் அந்த சூழலும் பறவைகளின் இன்னிசையும் எங்கள் நெஞ்சில் பல காலம் பண் இசைத்துப் பரவசப் படுத்தியது.மதுரைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இப்படித்தான் சிற்றூர்களுக்கும்.வைகை அணைக்கட்டுக்கும் ,கும்பக்கரைக்கும் எக்ஸ்கர்ஷன் அழைத்துச் செல்வார்கள்.கொஞ்சம் பெரிய மாணவர்கள் ஆனால் கொடைக்கானல் என்ற சொர்க்கபுரியே கூட்டிச்செல்வர்.குற்றாலம், கன்னியாகுமாரியும்அப்படித்தான்.எழுபதுக்களுக்குப்பிறகே பெங்களூரு, மைசூர்,திருவநந்தபுரம் ..எல்லாம் பொருளாதார அடிப்படையை வைத்தே!இன்றைக்கு எல்லோரும் எல்லா ஊர்களும் சென்று...
- Get link
- X
- Other Apps
ஏறக்குறைய 40 ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தது --இன்னும் அங்கே வசிப்பதுபோல் இருக்கிறது.'மதுரையைச் சுற்றிய கழுதையும் போகாது' என்பது ஏதோ பொறாமைபிடித்த ஜீவன் சொன்னது. 'குதிரை' என்றுதான் அது இருக்கவேண்டும்.எந்தஊரிலும் சிறப்புகள் உண்டு-மனம் பக்குவப் பட்டுவிட்டால். மதுரையில் ஆலய தரிசனங்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.சற்றே வித்தியாசமாக-- நான் படித்த சில நூல்களும் என்னைச் சுற்றிய மதுரைக் காட்சிகளுடன் விவரிக்க எண்ணுகிறேன். மனம் விசித்திரமானதே. திரைப்படமாக பலவும். பின்னணி இசையோடு சிலவும் எல்லாநேரங்களிலும் மனம் விளையாடிக் கொண்டே இருக்கிறது.ரமண மகரிஷி குறிப்பிட்டதுபோல் -"நடராஜப் பெருமானது தூக்கியாடும் திருவடிக் கருணைச் சிறப்பின் தத்துவமானது தமது அடியார்களை ஆன்ம விசாரமாகிய நடனத்தின் மூலமாக இதயம் அடையும்படிக் கொஞ்சி விளையாடும் அருளாட்டமே ஆகும்".எனது தந்தையாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரது புதல்வர் பரிக்ஷை எழுத மதுரைக்கு வந்திருந்தார்.அவர் பார்வையற்றவர்.ஆறு நாட்கள் மதுரைக் கல்லூரிக்கு அவரை எக்ஸாம் எழுதவும் திரும்பிக் கூட்டி வரும் பணி ...
- Get link
- X
- Other Apps
Madurai O madurai-(13). அன்னை அங்கயற்கண்ணியை துதித்துத் துவங்குகிறேன்-கடவுள் வழிபாடு இல்லாமல் நானில்லை.'ஆலயம் செல்வது என் தந்தையர் காட்டிய வழி. பலநூறு முறை ஆலயங்கள் சென்றிருப்பேன் இதோ மதுரையின் மணியாய், மணியின் ஒளியாய் விளங்கும் ஆலவாய் அழகன் கைப்பற்றிய அன்னை மீனாட்சி கோயிலுக்குள் நுழைகிறோம். கிழக்கு கோபுரம் வழியே செல்வதே மரபு."பாலும் தெளிதேனும்" சொல்லி விநாயகனை-நின்ற கோலத்தில் நிற்கும் முழுமுதற்பொருளை-வணங்கி ,வலப்புறம் மயில்வாகனனாய் பன்னிரு கரங்களுடன் சுடர் முகம் கொண்டு அன்புருவம் தாங்கி நிற்கும் முருகனை வணங்கி மேலே நடக்கிறோம்-'சண்முகக் கடவுள் போற்றி' எனத்தொழுத்தவாறே.குறுகிய முகப்பு வாயிலைக் கடந்தால் சற்று விசாலமான இடத்தில -ஒரு பக்கம் பொம்மைக்கடைகள் ,இடப்பக்கம் நறுமணப் பூக்கள் கடைகளும்--அழகிய மாலைகள் வாங்கிக்கொண்டு-மீண்டும் குறுகிய வாயிலைத் தாண்டி சிறிதே இருபுறம் கண்களை சுழற்றி கடவுளர் சிலைகளை பார்த்தவாறே,மீண்டும் இடப்பக்கம் பிள்ளையாரையும்,வலப்புறம் சுப்ரமணியரையும் வணங்கி -சற்றே பெரிய பொற்றாமரைக்குளத்தையே அடக்கிய இடத்தில் இடப்புறம் திரும்பி, கர்ப்பகிரஹ விமான...
- Get link
- X
- Other Apps
மதுரை ஓ மதுரை.-3 --கல்லூரியில் பயின்றதிலே ... அமெரிக்கன் கல்லூரியின் பெயரிலேயே அமெரிக்கா இருப்பதனால் நாங்கள் பயின்ற காலத்தில் (1967 -'71 )மெய்யாகவே சுதந்தரத்தோடும் சுயமரியாதையுடனும் கல்வி பயின்றோம்.இப்போதெல்லாம் கேள்விப்படுகின்ற கல்விச்சாலை இல்லை அது.ஆசிரியர்கள் மிகுந்த நட்புடனும் அன்புடனும் மாணவர்களுடன் பழகிய பொற்காலம் அது.'ஜென்டில்மேன்' என்றுதான் ஆசிரியர்கள் மாணவரை விளித்த நேரமது.முதல்நாள் அன்றே பியுசி சேர்ந்த மாணவர்கட்கு 'அறிமுக விழா.' ஒவ்வொரு துறையாக சுற்றிக்காண்பித்து -மிகப்பெரிய நூலகத்தையும் காண்பித்து -ஆசிரியர்களுடன் பழகவைத்து இனிதே தொடங்கும் கல்லூரி நாட்கள்.அழகான சோலைகள் போன்ற அமைப்புகள் நடுவே வானுயர்ந்த வகுப்பறைகள் ! சிறிய சர்ச் -பெரிய காண்டா மணிக்கோபுரம், பறந்து விரிந்த மைதானம் -அடடா சொற்களில்லைநயமுற எம் கல்லூரியை விவரிப்பதுற்கு!பிரம்மாண்டமான மெயின் ஹால் -சிவாஜி ஆரம்பித்த ஆடிட்டோரியம் ,நிழல் தரு நெடிய மரங்கள் -சில்லென்ற காற்று -இங்கே தான் ஆங்கில இலக்கியம் படித்தேன் மூன்று ஆண்டுகள் -கூடவே எனது ஆருயிர் சகோதரன் சிவாவும்..ஏசி ஹை ஸ்கூலில் இருந்தே தொடர...
- Get link
- X
- Other Apps
மதுரை ஓ மதுரை! 4 மயக்கும் மதுரையும். சினிமாக்களும்! மதுரையில் நான் என்னுடைய ஆறு வயதிலிருந்து -1957இலிருந்து 2000 வரை வளர்ந்தேன், பயின்றேன்,-வாழ்க்கையின் வளங்களை உணர்ந்தேன்.'போர்க்குணம்' என்னோடு பிறந்தது-சிறு வயதில் மஹாபாரதக் கதையில் எனக்குப் பிடித்தவர்- கண்ணனைத் தவிர -பீமன் தான்.அப்போதெல்லாம் மதுரையில் பத்து பதினைந்து தியேட்டர்கள்தான் இருந்தன.சினிமா பார்க்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் இல்லை.நான் ஆறாவது படிக்கும் போது 'அப்போதைய தினமணியில் 'உத்தமபுத்திரன்' பார்த்து மகிழ்ந்தேன்!சற்று இடைவெளிக்குப் பிறகு 'காதலிக்க நேரமில்லை' சென்ட்ரலில் பார்த்துவிட்டு அசந்துவிட்டேன்-காதலும் புரியாது கத்தரிக்காயும் புரியாத பருவம் அது. பிறகு நினைவுக்கு வருகிறது 'அன்பே வா' தான்--சிந்தாமணியில் அண்ணன் மணியோடு பார்த்துவிட்டு மயங்கிப்போனேன். இதெல்லாம் நடப்பது ஏசி ஹை ஸ்கூலில் படிக்கும்போது., பாட்டுக்கள் கேட்டுக்கேட்டு வளர்த்த காலம் அது.எம்ஜியார் மற்றும் சிவாஜி , டி எம் எஸ் பாடல்கள் மனதை ஊடுருவி நாளெல்லாம் நெஞ்சில் உலவிவந்து பரவசம் அடையும் காலமது. ஏதாவது பாட்டை இரைந்து ...