அன்பே எனக்குத் தெரியும் அன்பே-எனக்கு ஞானம் நல்கும் அன்பே-
என் பலம் அன்பு ,என் பெருமை அன்பு, கற்றுவிக்கப் படா திறன் என் அன்பு,
என் நம்பிக்கை இப்புவியில் அன்பு, ,மேலுலகில் அன்பு,
என் சிந்தனை அன்பு, என்னுடன் தொடர்ந்து வரும் எண்ணமும் அன்பு,
என் கற்பனையின் மகிழ்வு அன்பே,என் இதயத்தின் சுடர் அன்பு,
என் இன்பம் அன்பு,என் சமாதானம் அன்பு, என் புகழ் அன்பு,என் இனிய தலைப்பும் அன்பு,
நான் செய்வதனைத்திலும் குறிக்கோள் அன்பு,என் இருப்பின் ஆசையும் அன்பு,
பகலில் என் வாழ்க்கை அன்பு-இரவினில் என் கனவு அன்பு,
என் இனிய துன்பமும் துயரும், என் வலி,என் சந்தேகம்,என் தொந்தரவு,என் அவநம்பிக்கை ,
என் ஒரே தவறு,என் மகிழ்ச்சியற்றது,கவனமின்மையில் கவனமும்,அன்பே-
ஓ அன்பே இனிய அன்பே,இப்புவியான அன்பே.இறைமையான அன்பே,
சொல்லிவிடு இப்போதே என்னிடம் ஓ அன்பே, நீ என்னுடையவன் என்றே!
-Walt Whitman.

சற்றே சரிந்தே அமர்ந்திருந்தேன் ஓர் தோப்பில்
ஆயிரமாயிரம் பண்ணிசைக்கக் கேட்டிருந்தேன்
அந்த இனிமையான மனநிலையில் இன்பமான
எண்ணங்கள் துன்ப நினைவுகளையும் கொடுத்தன
இயற்கை தன் அழகிய படைப்புகளால் சேர்த்தாள்
மனிதகுல ஆத்மாவையும் என்னூடே
பெரிதும் வருந்திய என் இதயம் எண்ணியது
மனிதன் மனிதர்கட்காக என்ன செய்தான்
ப்ரிம்ரோஸ் மலர்க்கொத்துகள் ,அந்த பசுமை வனத்தில்
பெரிவின்கல் கொடி தன்னைப்பரப்பி வளர்ந்தது
என் நம்பிக்கை என்னவெனில் ஒவ்வொரு மலரும்
மகிழ்ந்து மகிழ்ந்து தன் காற்றைச் சுவாசிக்கும்
என்னைச் சுற்றியிருந்த புள்ளினம் குதித்தே விளையாடின
அவைகள் சிந்திப்பது என்னால் அளக்கமுடியாது
அனால் அவைகளின் சிறிய அசைவுகள்கூட
எனக்கு எத்தனை இன்பக்களிப்பைத் தந்தன
அரும்பிவரும் மொட்டுக்கள் விரிந்தன விசிறிபோல்
தென்றல் காற்றைப் பிடித்தே விளையாடிட
நான் சிந்தனைவயப்பட்டேன் -அதானே முடியும் -
இதிலெல்லாம் எத்தனை இன்பம் இருக்கின்றன
இந்த நம்பிக்கை எல்லாம் சொர்கத்திலிருந்தே வந்தது
இவையெல்லாம் இயற்கையின் புனிதத்திட்டமே
என் வருந்தும் இதயத்துக்கு காரணமே இதுதான் -
மனிதர்கட்கு மனிதன் என்னதான் செய்தான்?
-Based on William Wordsworth's 'Written in early spring'.


Comments

Popular posts from this blog