நான் இறப்பதற்காக நிறுத்தவில்லை
அவனே அன்புடன் நிறுத்தினான்
இவ்வண்டியில் நாங்களும் நிலையாமையும்
-மட்டுமே இருக்கிறோம்
மெல்லேவே பயணித்தோம்-அவனுக்கு வேகம் தெரியாது
எனது உழைப்பையும் ஓய்வையும் அவனது
பரிவுக்காகத் தொலைத்துவிட்டேன்
சிறார்கள் விளையாடும் பள்ளியைக் கடந்தோம்
அவர்கள் இன்னும் பாடங்களை முடிக்கவில்லை
தலையை விரித்துநிற்கும் நெல்மணிக்கதிர்களை
உடைய வயல்வெளிகளை கடந்தோம்
மறையும் சூரியனையும் தாண்டிச் சென்றோம்
ஈரமணித்துளிகளின் அணைப்பில் குளிரில் நடுங்கி-
மெல்லிய ஒற்றை ஆடையே அணிந்திருந்து-
சற்றே மேடேறிய வீட்டுமுன் நின்றோம்
கூரைகூட வேயாமலிருந்தது-அலங்காரமாயுமில்லை
பல நூற்றாண்டுகள் பறந்தனவோ-ஒவ்வொன்றும்
சிறியது ஒவ்வொரு நாட்களைவிடவும்-
அப்போதே வண்டியின் குதிரைகள் நிலையாமையைப்
பார்த்தவண்ணம் நின்றிருந்தன .
( In “Because I could not stop for Death by Emily Dickenson.

Comments

Popular posts from this blog