- BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAYமுடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது
மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின
ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர்...
இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியதுபார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது
எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி
தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது
மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளைஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும்
முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது
ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம்
அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம்அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில்
புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன
ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர்
எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார்நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று
வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ
சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் மேய்ப்பனின் குழலொலி
இவையாவும் இவர்களின் படுக்கையிலிருந்து எழுப்பாது இனிதகிக்கும் கணப்புகள் அவர்களை சுட்டெரிக்காது
எந்த சுறுசுறுப்பான இல்லாளும் அன்பைக் சொரியார்
எந்தக் குழந்தையும் ஓடிஓடித்தந்தையின் வரவு கூறார்
அவர்தம் முழங்காலில் ஏறி விரும்பும் முத்தம் தாரார்என்றென்றும் வயல்களில் அறுவடை இவர்களே செய்வர்
ஏரின் உதவியில் நிலத்தில் விதைகள் இனிதே விதைப்பர்
குதூகலமாய்க் கொண்டாடி நிலத்தில் கூடி உழைப்பர்
உறுதியான வெட்டுதலில் காடுகள் விளைநிலமாயிற்றுபேராண்மை அன்று அவர்கள் உழைப்பை உதாசீனிப்பதும்
அவர் இல்ல மகிழ்வுகள், மறைபடும் விதிகளை மிதிப்பதும்
பேராற்றல் ஒருபோதும் அவர்கள் சிரிப்பை வெறுக்க எண்ணாது
எளியவர்களின் சீரியபணிகளை என்றுமே எள்ளல் ஆகாதுபெருமை ஏன் அரச சால்வையினால் டம்பம் ஏன் பலத்தால்
வழங்கிய அழகு அனைத்தும் சேர்த்த செல்வம் எல்லாம்
காத்திருக்கும் தவிர்க்கமுடியா அந்த ஓர் மணித்துளிக்கு
புகழின் வழிகள் யாவும் நம்மை இடுகாட்டுக்கே இட்டுச்செல்லும்பெருமை பீற்றுவோரே எதற்கும் கற்பிக்காதீர் நோக்கம் ஏதும்
இவ்வேழைகளின் கல்லறை பளிங்கில் இல்லாதது குறித்து
தேவாலய நீள்வரிசைகளும் அலங்கார வளைவுகள் எங்கும்
எதிரொலிக்கும் சங்கீதமே முழங்கும் இவர்கள் உயர்வுதனைஅறிவு தனது பக்கங்களைக் கரையான்போல் அரித்து
உழைப்போரின் கண்களில் காணாமல் மறைத்தது
கடும் இல்லாமை அவர்கள் சீரிய சினத்தை அடக்கியது
அதுவே அவர் அன்பு ஆத்ம ராகங்களை உறைய வைத்ததுபற்பல ஸ்படிகக் கற்கள் ஒளி சிந்திச் சுடர்விடும்
இருண்ட அளக்கவொண்ணா ஆழ்கடல் தாங்கிடும்
பற்பல மணம் மிகு மலர்கள் பிறந்து சிரிக்கும் யாரறிவார்
அவை தம் இனிமையையெல்லாம் பாலையில் வீணடிக்கும் - துன்பங்கள்தந்த ஆண்டு காற்றோடு போயிற்று...
துவண்ட இதயத்தோரே, எழுமின் எழுமின் -அன்பு பிரபு
தன் மந்தையைப் புயல் இல்லா இல்லத்திற்கு அழைக்கிறார்
ஓசைமிகுக்கடலும்தொடா நிம்மதிதரும் இடம் அதுவே
அங்கே ஒளிவிடும் மணலும் பால்தரும் மலையும் உண்டு
துன்புறுவோர் சூரியனில் காய்ந்து, பாலையும் குடிப்பர்
நிழலும் பனித்துளியும் புற்களும் முழங்கால்வரை உண்டு
ஓசைமிகுக் கடலும் தொடா நிம்மதிதரும் இடம் அதுவேஅவர் காயங்களுக்கு மருந்திட்டு அழுவோர் கண்ணீர் துடைப்பார்
அவர்கள் துயிலிலாழ மிருதுவான தலையணை-படுக்கை தருவார்
"வாருங்கள் , வாருங்கள் எம் பிள்ளைகாள்" என்றே அழைப்பார்
உங்கள் அனைவர்க்கும் ஓசைமிகுக்கடல் தொடா இடம் தருவார்புத்தாண்டின் முதல்நாள் மறைந்தோர் கடலில் மறைவார்
எழுமின் எழுமின் -துவண்ட இதயத்தோரே , தலை குனிந்தோரே
உமது பிரபு நீரில் நடக்கிறார் ,அவரே நம் அனைவர்க்கும் மேய்ப்பர் -
நம் எல்லோருக்கும் ஆழ்கடல் தொடா இடம் தரும் தேவன் அவரே!Based on Katherine Tynan's A song for the New year. - c
சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு- சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என் று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்" கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின் ...
Comments
Post a Comment