நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...
Posts
- Get link
- X
- Other Apps
பக்தி மணம் மிகு மதுரை என்றென்றும் கலைகளையும் போற்றியே வளர்த்தது.அழகு தமிழுக்கு ஈராயிரம் ஆண்டுகட்குமுன்னரே சங்கம் வைத்து அதில் இறையனார் வந்து பாடிய மரபும் இருந்தது.சங்கர தாஸ் ஸ்வாமிகள் போன்றோர் நாடகக் கலைக்கு வித்திட்ட சமீபத்திய சரித்திர நிகழ்வுகளும் உண்டு.மதுரை மணி, மதுரை சோமு -பட்டி தொட்டி எல்லாம் தமிழைக் கொண்டுசென்ற MSS., டி எம் எஸ் ,சேஷகோபால் போன்ற இசை மேதைகள் மூலம் இசையை போற்றி பேணி வளர்த்தும் மதுரை தான்.கட்டிடக்கலைக்கு ஒரு மிக அபூர்வ மஹாலைக் கொடுத்ததும் மதுரை தான். இந ்தியாவுக்கு ஓர் தாஜ் மஹால் எனில் தமிழகத்துக்கு ஓர் திருமலை நாய்க்கர் மஹால்.அதன் அழகும், பெருமையும், நேர்த்தியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே போகலாம்.மதுரையின் மய்யப் பகுதியில் மீனட்சிகோயிலுக்கு அருகே இவ்வரிய அரண்மனை அமைந்துள்ளது.இதுபற்றிய வரலாற்று குறிப்புகள் கொடுக்க எழுதவில்லை-எனக்குத் தெரிந்த மதுரையில் என் உணர்ச்சிக்கும் உணர்வுகட்கும் கருப்பொருளாய் விளங்கிவரும் இடங்களின் கவித்துவத்தை வெளிக்கொணர்வதே எனது நோக்கம்.மன்னர் திருமலையின் அழகியல் சிந்தனையின் அற்புத வெளிப்பாடாகவே இம்மாபெரும் கட்டிடத்தைப் பார்க்கிறே...
- Get link
- X
- Other Apps
JK பாணியில் சொல்ல வேண்டுமானால் 'என் காலில் நகம் முளைத்த காலம் தொட்டே' எங்கள் வீட்டில் ரமணரும், மஹாபெரியவரும்-மிக அருமையான பெரிய சைஸ் படங்களாக உள்ளதைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்தனர்.அவர்கள் கண்களை பார்த்துக்கொண்ட இன்புறுவதில் நாட்டம் மிகுந்தவனாய் இருந்தேன். ரமணரின் சொக்கப்ப நாய்க்கர் தெரு-மீனாட்சி கோயிலின் தெற்கு கோபுர வாயில் எதிரில்--'50 களின் பிற்பகுதியிலிருந்தே நாங்கள் சென்று வரும் வழிபாட்டுத் தலமாக இருந்தது.அங்கேதான் அவர் தனது 17 ம் வயதில் ' நான் யார்?' எனக் கேட்டு அதன் விட ையையும் கிடைக்கப்பட்டுத் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.மிக நீண்ட-ஆனால் சிறிய அக்காலத்து அக்ரஹார வீடு ஒன்றைக் கற்பனை செய்தால் அந்த அழகிய வீடு மனதில் உருவாகும்.இன்று ரமண கேந்த்ரா பக்தர்களின் முயற்சியில் அழகிய கட்டிடமாகப் பொலிகிறது.ரமணாஸ்ரமத்தின் கட்டுப் பாட்டில் இயங்குகிறது.ரமண பஜன் மற்றும் ரமணர் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.ரமணரின் வரலாற்று முக்கிய இடம் என்றவகையில் மதுரைக் காரர்களுக்கு மிகவும் பழக்கமான இடமாக இந்த இடத்தைக் குறிப்பிட முடியாது,ஆனால் ரமண பக்தர்களுக்குத் தெ...
- Get link
- X
- Other Apps
அந்தக் காலம் முதல் இன்றுவரை நான் ரசிக்கும் சிலை -மதுரையில்-கட்டபொம்மன் சிலையே!அதன் கம்பீரம் எனக்கு மிகவும் பிடிக்கும்-யு சி ஹை ஸ்கூலுக்கு முன்-பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே-வாளொடும் வனப்போடும் காட்சி அளிக்கும் கட்டபொம்மன் என்றும் போற்றுதற்கு உரியவர்.இப்போதெல்லாம் சிலைகள் இல்லாத ஊரும் உண்டா என்ன?மதுரையில் எப்போதுமே சரியான இடங்களில் சிலைகள் எழும்பிவிடும்.மரியாதை வரவழைக்கும் தேவர் சிலை கோரிப்பாளையத்திலும், பெரியார் சிலையும் அண்ணா சிலையும், எம் ஜி யார் சிலைகளும் எங்கெங்கு காணினும், காமராசர் சிலை விளக்குத்தூணிலும், ஊரின் நன்றி உணர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக பார்க்கும் இடங்களிலெல்லாம் நிறைந்து உள்ளன. .ஒரு பஸ்ட் சைஸ் காந்தி சிலை வெகு நாட்களாகவே மீனாட்சி கோயில் முன் நான் பார்த்து வியந்ததுண்டு.சிம்மக் கல்லும் யானைக்கல்லும் அந்தந்த இடங்களுக்குப் பெயர் சூட்டும் விதத்திலேயே அமைந்துள்ளன.நேதாஜி சிலையும் ஜான்சி ராணி சிலையும் தான் எவ்வளவு அற்புதமாக திண்டுக்கல் சாலை துவக்கத்தில் எழும்பியுள்ளன.இவைகளெல்லாம் போராடுவர்களுக்கு வசதியாக -அவர்கள் கூடிக் கூட்டம் நடத்தவும் ஆர்ப்பாட்டம் செய்ய உந்து ...
- Get link
- X
- Other Apps
காலங்காலையில் மார்கழி மாதத்தில் பெருமாள் கோயிலிலிருந்து'உள்ளம் உருகுதய்யா.கற்பனை என்றாலும் ,போன்ற டி எம் எஸ் பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே நாட்களை துவங்குவோம்-ரேடியோவில் எப்போது பார்த்தாலும் கர்னாடிக் மியூசிக் தான்-சினிமாப்பாடல்கள் ஞாயிறு மட்டும்தான். நாங்கள் அக்ரஹாரத்திலோ அல்லது எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களுடனோ அதிகம் வளர்ந்தவர்கள் இல்லை.ஜாதியை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.எல்லோருடனும் இணக்கமாகப் பழகுவதையே எங்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுத்தனர்.பாடல் கேட்பது எப்படி பிடிக்க ஆரம்பித்தது என்றால்-மதுரை வீதிகளில் பல இடங்களில் பாசறை வைத்து தி முகவினர் எம் ஜியார் பாடல்களை ஒலிபரப்பினது தான்-'குறிப்பாக-திராவிடப் பொன்னாடே, ,அச்சம் என்பது மடமையடா,தூங்காதே தம்பி, மற்றும் பல பட்டுக்கோட்டையார் பாடல்களும் -கண்ணதாசன் பாடல்களும் கேட்டுக்கேட்டு மனதை பறிகொடுத்தோம்.சித்திரைபொருட்காட்சி. புட்பால் பந்தயங்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவைகளோடு சிவாஜி, ,ஜெமினி,எஸ் எஸ் சார் பாடல்களும் எங்களை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். கல்யாண வீடுகளில்-'வாராயோ தோழி வாராயோ' இல்லாமல் இராது. திமுக பற்றியெல்லா...
- Get link
- X
- Other Apps
மதுரைக்கு நேருஜி வந்ததும் நாங்கள் அவரை அமெரிக்கன் கல்லூரி அருகே ' தரிசித்ததும்' இப்போதும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.காந்திஜி, நேருஜி. காமராஜர் எல்லாம் எங்களுக்கு வணக்கத்துக்குரியவர்கள் .அவர்கள் நினைப்பே கூட பெருமையாய் இருக்கும்.நேருஜி அவர்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு வருகை தந்தார்.எனது தந்தையர் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் அவரைப் பார்க்க என் எம் பி பேக்கரிக்கு எதிர்ப்புறம் கடுமையான வெய்யிலில் காத்திருந்தோம் . அதோ அவர்-திறந்த கார் ஒன்றில்-பலத்த கரகோஷத்துக்குக்கிடையே-மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஒட-நல்ல ரோஜா நிறத்தில் சுந்தர புருஷராகத் தோன்றினார்.அப்போது எனது தந்தையர்-ச்சாச்சா நேருஜிக்கி-என்று முழக்கமிட -மக்கள் அனைவரும் ஜெ! என்றே குரல் கொடுக்க - மாபெரும் தலைவர் தனது கழுத்தில் போடப்பட்ட மாலையை எடுத்து என் தந்தையார்மேல் வீசியெறிந்து தன அன்பைக் காட்டிட-மெய் சிலிர்த்தோம் அனைவரும். இதுநடந்து சில வருடங்கள் கழித்து பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்,ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன்-இருவரும் பின்னிருக்கையில்-காமராஜர் அவர்கள் முன்னிருக்கையில் பனகல் வீதியில் எங்கள் வீட்டுமுன் ஒரு காரில்கடந்து பால்பண்ணை...
- Get link
- X
- Other Apps
"சொல்லச் சொல்ல இனிக்குதடா "-முருகன் பெயரை மட்டும் அல்ல, மதுரைத்தமிழையும் எண்ணி எண்ணி!மதுரைக்காரர்களுக்கே அந்த உண்மை தெரியாது. கோவைத் தமிழ் கொஞ்சிப் பார்ப்பதுபோல் இருக்கும்-"ஏனுங்க" என்றெல்லாம்-சிவாஜி -மக்களைப் பெற்ற மகராசி'யில் பேசுவது போல்.நெல்லைத் தமிழ் 'என்னலே ' என்று கூவுவதுபோல் இனிமையாக இருக்கும்.எல்லாம் தமிழ்தான்-சிறப்புடையதுதான்-சென்னைத் தமிழ் -கேட்கவே வேண்டாம்-வடசென்னையில் இன்னும் உயிரோடு உலவிவருகிறது.பல இலக்கிய ஜாம்பவான்கள் சிறப்பாகவே சென்னைச் சேரித் தமிழைக் கையாண்டிருப்பார்கள்.இலக்கியக் கூட்டங்களில் நல்லமுறையில் என்றும் 'ஸ்டாண்டர்ட் தமிழ்'பேசப்பட்டு வருகிறது.தமிழ் ஒருபோதும் அழியாது.மேன் மேலும் வளரும். பள்ளிகள் இந்தத் தமிழைப் பரப்புவதில் பெரும் பங்கு வகித்தன.1965 ல் நடந்த இந்தி எதிர்ப்பும் பல ஆண்டுகளாகவே நடைபெற்றுவந்த தனித் தமிழ் இயக்கங்களும் இந்த வேள்வியில் முக்கியப் பங்கு வகித்தன.அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளி,மதுரைக்கல்லூரி உயர்நிலைப் பள்ளி, யுசி ஹை ஸ்கூல்-செயின்ட் மேரி'ஸ் உயர்நிலைப் பள்ளிகள் அப்போது மதுரையில் பிரபலமானவை...