The One and Only JK....(7). Jayakanthan wrote for magazines , spoke in public too that appeared in dailies and anyone can read them to-day for all he spoke and wrote are available in print media.As one reads what he did speak with regard to politics , we wonder at his prophetic statements and we are sad that he had not been paid the attention he deserved.I am not going into them for my domain here is to show the gentleman he had ever been despite the odds that he was compelled to face. Jk was never after awards or praise from any quarters. Once Rajinikanth came to congratulate him. for the Jnanpith award.He was so unassuming as always and he was expressing his happiness over that great honor conferred on JK in simple hearty manner.JK thanked RK with his genial smile and when RK started saying that it should have been celebrated in a big manner by the Government JK brushed him gently to leave the matter there.Af...
Posts
Showing posts from March, 2017
- Get link
- X
- Other Apps
அந்தக்கால மதுரையைக் கருப்பு வெள்ளைப் படங்களில் காண்பிக்க வருமுன் நாங்க கோபுரங்களைத் தான் காட்டுவார்கள்.கண்ணதாசன் -பட்டுக்கோட்டையார் பாடல்களும் மதுரைத் திருவிழாக்களும் மனதெல்லாம் நிரம்பி இன்றும்கூட மதுரையின் மகத்துவம் ஒளிர்ந்துகொண்டே இருப்பது ஒவ்வொரு ஊர்க் காரர்களுக்கும் அவரவரது ஊர் நினைவுகளில் கிடைக்கும்.மதுரையில் பல இடங்களும் இன்றும் என்றும்போல் பசுமையாக மனக்கண்ணில் தெரிகின்றன- புட்டுத்தோப்பு என்றோர் இடம்-அங்குதான் ஆண்டுதோறும் ஈசன் பிரம்படி வாங்கும் இடம்-ப்ரசாதமாகப் புட்டு கிடைக்கும் -மதுரையில் எல்லார் வீட்டிலும் அது உண்டு. கோயில்நடையைச் சாத்திவிடுவார். பக்தர்களுக்கு ஏற்படும் சிலிர்ப்பு பக்தனுக்குத்தான் புரியும்.எத்தனையோ நூற்றுக் கணக்கான வருடங்களாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு எத்தனை அர்த்தமுடையது-'பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே-பிரம்படியும் பட்ட கோமானே' என்று உள்ளம் உவகை கொள்ளும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது. மதுரையைக் 'கந்தக பூமி' என்று அதன் வெப்பம் தாளாமல் சொல்வர். கோடையில் வைகை ஆற்றின் படுக்கையில் பல நீரூற்றுகள் தோண்டி-பத்தே பைசா...
- Get link
- X
- Other Apps
The One and Only JK... Here was an illustrious writer,thinker,philosopher ,orator who stopped writing as he had done so much in so short a period but observed 'silence' that became more 'vociferous'.How many answers JK had given for not writing and why wasn't it asked to any other celebrated writer?To say that he should have continued was none of anyone's business as he himself had stated all that he wanted to happen in society did really materialize-- from better living standards to women's lib but more than that what he couldn't bear-the degradation of politics also reared its ugly head .To speak against people in power now may cost one's honor and to lose honor no self respecting gentleman would wish to face-better be quiet and watch-be a spectator and not a participant.He was right and by doing so he had become more acceptable even to his detractors. Further a man like JK had many many enemies for he had been so blunt and outspoken.He expo...
- Get link
- X
- Other Apps
நாணுகின்ற பெண்ணுக்கு.... ........................................................................................ ஆனால் எனக்குப் பின்னால்எப்போதும் நான் கேட்கிறேன் காலதேவனின் சிறகுமிகு ரதம் விரைந்து வருவதை ; நமக்குமுன்னர் அங்கே இருக்கிறது நிலையாமை என்ற பரந்த பாலைவனம் . உன் அழகைப் பார்க்கவே முடியாது உனது பளிங்கு இதய அறையில் எனது பாடல்கள் எதிரொலிக்காது ; புழுக்களும் உனது சேர்த்துவைக்கப் பட்ட புனிதத்தை ருசிக்கும், நாள்பட்ட கற்பும் மண்ணாகிவிடும் எனது அனைத்துக் காதலும் சாம்பலாகிவிடும் . இடுகாடு என்னவோ அழகே,இனிமையே- ஆனால் நான் நினைக்கிறேன் எவரும் அங்கே தழுவதில்லையே ... ஆண்ட்ரு மார்வெல்.
- Get link
- X
- Other Apps
" சின்னஞ்சிறு பிஞ்சுகூட கஞ்சிக்காக அலையுது இன்னும் இந்த நிலைமை இந்தியாவில் இருக்குது "--போன்ற விழிப்புணர்வுப் பாடல்களை கலைஞர்களைக் கொண்டு மதுரை மாவட்டம் முழுவதும் வீதியோர நாடகங்கள் நடத்திச் செல்லும் வாய்ப்பு எனக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொடுத்தது .Bharat Gyan Vigyan Jaatha (BJVJ ) என்று HRD மினிஸ்ட்ரி ஆல் அகில இந்தியா முழுவதும் எழுத்தறிவுக்கான பிரச்சார அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளனாக நான் தேர்வு செய்யப்பட்டு அறிவொளி இயக்கம் நடத்தவும் உழைக்க நேர்ந்தது-நான் செய்த மிகப் பெரிய தவப் பயனே.அந்த மாபெரும் இயக்கம் -மக்கள் இயக்கம் வெற்றிபெற்று இருந்தால் இந்தத் தேசத்தின் தலைவிதியே மாறியிருக்கும்.என் செய்வது -நல்லன எல்லாம் தான் சிறப்பாக நடக்க முடியாமல் போகும் நிலையை நாம் பார்த்திருக்கிறோம்-எந்த அரசு நடத்தியததோ அதே அரசு இதை அதிகமாக நடத்தாமல் பார்த்துக்கொண்டது சாபக் கேடே!டாக்டர்.வி.பி.ஆத்ரேயா மற்றும் TNSF செயல் வீரர்களால் நடத்தப்பட்ட இந்தத் திட்டம் பசும்பொன் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் -ஷீலா ராணி சுங்கத் மற்றும் குத்சியா காந்தி ஆகிய மாவட்ட கலெக்ட்டர்களைக் ...
- Get link
- X
- Other Apps
சிறையென்செய்யும்?-2. அடுத்தமுறை பத்தே நாட்கள் தான். அதை எதிநோக்கி வீட்டையும் தயார் செய்துவிட்டுக் களமிறங்கி எங்கள் போராட்டத்தின் இறுதிக்கட்டமாக சிறைக்குள் சென்றோம்.ஆசிரியர்கள் போராடலாமா என்றெல்லாம் கேள்விக் கண்டனங்கள் -எதிர்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு கல்லுரிப் போராட்டத்தைப் படித்தாலே இன்று எல்லாவற்றையும் மாற்ற ஆர்வம் கொள்ளும் இளைய சமூகத்தினர் வியப்படைவர்.ஊதிய உயர்வு ,பணிப் பாதுகாப்பு இவைகளைவிட மோசமான பிற்போக்குக் குணம்-பல -கல்லூரி நடத்துவோரிடம் மலிந்திருந்தது.-ஆசிரியர்களை அடிமைகள்போல் நடத்தும் போக்கு.அதுவும் பல ஜாதிகளின் பெயரைச் சொல்லியே அமைந்திருந்தன-பட்டியலிட்டுப் பாருங்கள்-பல கல்லூரிகளும் ஜாதிப்பேரை வைத்தே இயங்கி வரும் இன்றுவ ! ரை! இதில் 'ஜாதி இல்லை, மதம் இல்லை, இனம் இல்லை, மொழி இல்லை-கொள்கை உண்டு கோஷம் உண்டு' என்று சொல்லியே நாங்கள் கொக்கரித்துக்கொண்டு கோஷம் போடுவோம்.அதையெல்லாம் நம்பினோம்- நிச்சயம் மாற்றம் வரும் என்று கனவெல்லாம் கண்டோம். 'இனி என்ன செய்யவேண்டும்' என்று திட்டங்கள் தீட்டினோம்- சிறைச்சாலைகளில் வகுப்புகள் நடந்தன. எங்கள...
- Get link
- X
- Other Apps
மதுரைக்காரனுக்குப் போராட்டம் இயல்பானது.அநீதியைக் கண்டித்து கண்ணகி மதுரையை எரித்ததை வைத்துமட்டும் நான் சொல்லவில்லை,காந்தியார் கூட மதுரை வயல்வெளிகளில் அரை முழம் ஆடையுடன் வியர்க்க விறுவிறுக்க உழைக்கும் நம் விவசாயிகள் நிலை கண்டு ,தனது ஆடையையும் குறைத்து வாழ்நாள் முழுதும் எளிய வாழ்க்கை வாழ்ந்த சம்பவமும் மதுரை .மண்ணுக்கே உரியது.மிகவும் சாதுவே ஆயினும் மிரண்டால் ...நாடு கொள்ளாது.உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.நியாத்திற்கே கட்டுப்படுவான்.அவனை வென்றுகொள்வது எது?.கொஞ்சம் உசுப்பிவிட்டால் போதும்.இத்தனை பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா? எனது போராட்ட காலங்களுக்கு ஓர் காரணம் வேண்டாமா?கோபமும்,முரட்டுத்தனமும் பள்ளி வாழ்கைக்குப் பின் குணமாயிற்று.உடல்வலிமைக்குத் தான் பயிற்சிகள், கராத்தே -ஓ அந்த கடுமையான நாட்கள்!சினிமாவுக்கும் அதிலெல்லாம் பங்கு உண்டு. திரு.பி.கே. ராஜன் என்பாரும் பி என் நாயர் என்பாரும் நான் பணிபுரியும் கல்லூரிக்கு வந்து ஆசிரியர் மன்றத்தின் ஈடுபாடுகளில் பங்கெடுக்க எங்களையெல்லாம் அழைத்தனர்.எங்களில் சிலர் தயங்கியதால் திரு.பார்த்த சாரதி அவர்க...
- Get link
- X
- Other Apps
சிறையென் செய்யும்? மதுரை அரசரடி -ஆரப்பாளையம் சந்திப்பருகே நியூ ஜெயில் சாலையில் உயர்த்த மதில்களுடன் காட்சி அளிப்பதே மதுரை சென்ட்ரல் ஜெயில்.கனவு கூடக் கண்டதில்லை அங்கே தங்கியும் வாழ்க்கையில் புதிய அனுபவங்களைப் பெறமுடியும் என்று.22 நாட்கள் ஒரு முறை, 10 நாட்கள் ஒருமுறை 4 நாட்கள் ஒருமுறை-இதைத்தவிர எண்ணற்ற நாட்கள் ஒருநாள் காவல்-எனக்கு காராக்கிரஹம் ! கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அருகே போராட்டம் என்று வந்து பார்த்தால் போலீசார் அங்குகூடும் ஆசிரியர்களை விரட்டிக்கொண்டிருந்தார்கள்.ஏன் முறைப்படி அனுமதிபெற்றுத் தானே இந்த அறப்போரை நடத்துகிறோம்-என்ன ஆயிற்று என்று யோசித்தால் மோகன் கல்யாணசுந்தரம் -'ஸ்ரீ-ஏற்கனவே கூடிய நம்ம ஆட்களைக் கைது செய்து கொண்டு போய்ட்டாங்க -அநேகமா ஜெயிலுக்குத் தான்" என்கிறார். நல்ல அறிவுஜீவி-பழகுவதுற்கு இனிமையானவர். தியாகராஜர் கல்லூரியில் எனக்குச் சீனியர்.அப்போதே ஸ்டாலின், டிராட்ஸ்கி.லெனின் எல்லோரையும் நிரம்பப் படித்தவர்-ஆனால் அடக்கமானவர். வாடா போடா என்று நட்போடு பேசிக்கொள்வோம்.."அதனாலென்ன -வா நம்ம எல்லோரும் போகலாம்"என்றேன்-மேலும் சிலர் சேர்...
- Get link
- X
- Other Apps
மாரியம்மன் தெப்பக்குளம் .. மதுரையில் ராஜாஜி பார்க்கைத் தவிர காற்று வாங்கும் இடமாகப் பெரிய கோயில் பிரகாரங்கள் உண்டு -மீனாட்சி கோயில் ஆடிவீதி , கூடலழகர் பிரகாரம் மற்றும் பரந்துபட்ட மாரியம்மன் தெப்பக்குளம் போன்றவை.எங்கள் காலத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் நீர் நிறைந்த கண்கொள்ளாக் காட்சி தரும் எழில் ஓவியம் போல் இருந்தது-அறுபதுகளில்.படக்குச் சவாரியும் உண்டு மைய மண்டபம் சென்றுவர!மையமண்டபத்தில் மலர்கள் நிறைந்த சோலையும் இருந்தது-வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டு.சாப்பிடத் தின்பண்டங்கள் கிடைக்கும்,குளிர் தரும் நெடிய மரங்கள் உண்டு.வயிறார அருந்த நல்ல குடிநீரும் கிடைக்கும்.நாங்கள் ஆடி ஓடி விளையாடி இன்புற்று மகிழ்ந்திருந்தோம்.பின்னர் காலாற நடந்து நல்ல காற்று வாங்கும் இடமாகவே மாறிப் போனது. அதனாலென்ன-ஆண்டுக்கு ஓர் முறை தைப்பூசத்திரு நாளில் தெப்ப உதசவத்தில் அன்னையும் தந்தையும் மலர்களும் ஒளிமிகுவிளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட படகில் பவனி வரும் அற்புத விழா இன்னும் முன்னைக்கு காட்டிலும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.பல்லாயிரக் கணக்கில் மக்கள்கூடி அருளைப்பெறு...
- Get link
- X
- Other Apps
Srikrishnan Ku · 1 March at 20:37 . நேரு ஆலால சுந்தர விநாயகர்... எழில்மிகு மதுரையில் வடக்குமாசி-மேற்குமாசி சந்திப்பில் அருள்பாலிக்கிறவரே நம் நேரு ஆலால சுந்தர விநாயகர் .எத்தனையோ கூட்டங்களை பார்த்த இடம் அது.மகத்தான சிந்தனையாளர்களை , பேச்சாளர்களை ,பட்டிமன்றங்களை தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்களைக் கட்டிப் போட்ட இடம் அது-ஏன் அதற்கு 'நேரு' பெயரும் வந்தது ?ஒருவேளை நேரு அவ்வழியில் செல்லும்போது கோவிலில் நிறுத்தி அவருக்குப் பிள்ளையாரின் துண்ணுறு கொடுத்திருக்கலாம்-அவரும்-ஒரு மரியாதைநிமித்தம் வாங்கிக்கொண்டிருக்கலாம்-அவருக்க ... ுத்தான் 'பக்தி'எல்லாம் கிடையாதே.வருவோரும் போவோரும் ஜேஜே என்று காட்சி அளிக்கும் இடமே இது.பெரிய தேர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் -அப்போது பார்க்க வேண்டுமே கூட்டத்தை-பிளக்கும் வெயிலில் -ஆலவாய் அழகனுக்கும் அங்கயர்க் கண்ணிக்கும் வாழ்த்தொலிகள் எழுப்பி கூட்டத்தில் தேர் வரும் சமயம் உள்ளமே அதிருமே..அழகிய மதுரையின் அசத்தும் கன்னியரும் காளையரும் கண்களால் கதைபேசும் காவிய நிகழ்ச்சிகளும் அங்கே நிறைவேறும்!பல்லாயிரக்கணக்கான உழைக்கும் வர்க்கத்து வீ...
வெற்றி உறுதி
- Get link
- X
- Other Apps
வெற்றி உறுதி - விநாயகனைத்தொழ ! முதல் கவிதை எழுதுவதால் எழுத்துக்கு சிறப்பு இல்லை படிப்பதனால் அதற்கு மதிப்பு . .................... நினைக்க நினைக்க ..... எனக்கு பிடித்த இலக்கியக் காட்சிகள ஜெயகாந்தன் தமிழிற்கு கிடைத்த மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். எவருக்கும் அஞ்சாமல் தனது மனச்சாட்சியிற்கு சரி எனப்பட்டதை சோரம் போகாமல் எழுதி வந்தவர் . கடைசி சில வருடங்களாக எழுதாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை எனது அனைத்து படைப்புகளையும் தமழர்கள் படித்து விட்டார்களா என்ற ஒரே பதில் முலமே சமாளித்தவர்.