எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா! தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே! ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின- ஒரு பறவையும் பாடுவதில்லை! எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா! ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்? அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது- அறுவடையும் நன்கு முடிவுற்றது. உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு- முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு - சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு- உன் பளபளக்கும் கன்னமெல்லாம்! குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்! அழகு அவள் அழகு -தேவதையைப் பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி- ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை! அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன் கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்-- பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து- கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்! எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம் பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்- ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்- கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி ! ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும் உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே! புரியா மொழியில் விசும்பினாள...
Posts
- Get link
- X
- Other Apps
(TO JS /07 M 378 இந்தப்பளிங்குக் கல்லறை அரசால் எழுப்பப்பட்டது ) அவனுக்கு எதிராக எந்த அலுவலகத் தாக்கீதுமில்லை எனக் கணக்கெடுப்புத்துறை கூறிற்று அவனது நடத்தைக் குறித்து அனைத்துத் தகவல்களும் ஒத்துப்போகின்றன இக்காலப் பொருள்படி -பழைய மதிப்பீடுகளில் -அவன் ஒரு மஹான் - ஏனெனில் அவன் செய்ததெல்லாம் சமுதாய மேம்பாடுகளுக்காகவே யுத்தகாலம் தவிர அவன் பணியிலிருந்து ஓய்வெடுப்பதுவரை அவனது தொழிற்சாலையில் ஒருமுறைகூடப் பணிநீக்கம் செய்யப்படவில்லை- அவன் தனது பட்ஜ்மோட்டார் நிறுவனர்களிடம் த்ருப்திதரும் முறையில் பணியாற்றி இருக்கிறான்-என்றுமே வேண்டாதவனாகவோ அல்லது விசித்திரமான எண்ணங்களைக் கூறியதாகவோ எந்தப்புகாரும் இல்லை- ஒழுங்காகவே சங்கத்திற்குக் கொடுக்கவேண்டிய சந்தாவையும் செலுத்தி இருக்கிறார்- (நமது தகவல்படி அந்த சங்கம் சரியானதே ) நமது சமூக உளவியல் நோக்கர்கள் கூற்றுப்படி அவன் அனைவருக்கும் தெரிந்தவனாகவும் போதிய அளவே குடிப்பவனாகவும் இருந்து வந்திருக்கிறான்- இதழியல் துறைப்படி-தினமும் நாளிதழ் வாங்கிப் படித்துள்ளான்- சாதாரணவகையிலேயேதான் விளம்பரங்களை விமர்சித்துள்ளான்- அவனது பெயரில் எடுக்கப்பட்...
- Get link
- X
- Other Apps
எப்போது சிவாஜியைப் படத்தில் பார்த்தேன் ?பாகப்பிரிவினை தான் முதல் படம்-ஒன்பது வயதில் என்னபுரியாது?ஆனால் ஏன்பிறந்தாய் மகனே-என் அக்காவின் திருமண நலங்கில்பாடித் திட்டு அப்பாவிடம் வாங்கிய அனுபவம் இருக்கிறதே!பாவமன்னிப்பும் பார்த்துவிட்டு உருகித்தான்போனேன்-பாசமலர் பார்க்கமுடியாமல் ஓடிவந்துவிட்டேன்.பாலும் பழமும் பின்னாளில் பார்த்துவிட்டு வீட்டில் உடல்நலம் குன்றிப் படுத்த அப்பாவுக்கு உதவிசெய்வது முக்கியம் என்று உணர்ந்தேன்.புதியபறவையும் அப்புறம்தான் பார்த்தேன்-பார்த்தசாரதி சாரின் தந்தையார் நடத்தி வந்த தத்தனேரி-ஜெமினி டாக்கீஸில்!டூரிங் தியேட்டர் அது.நவராத்திரியும் அங்கேதான்-எல்லாம் ஓசியில்!பிழிய வைத்துவிடும் துன்பியல் படங்கள் அவை-வீட்டில் துயரமான நாட்களில் அருமருந்தாக சிவாஜிபடங்கள் இருந்தன-ஆனால் எம் ஜியார்பட ரசிகர்களே முரடர்களாகவும் வம்பு செய்பவர்களாகவும் இருந்தனர்-சிவாஜி ரசிகர்களெல்லாம் நளினமாகவும் நாகரீகமாகவும் இருந்தனர்(என்னுடைய அனுமானம்). எத்தனை எம்ஜியார் சிவாஜி படங்கள் பத்தாவதிலிருந்து ?முப்பது வயதுவரைதான் -அப்புறம் சினிமா மயக்கம் என்னை விட்டுவிட்டது-போராட்டக் களம்தான் ஈர்த்தது--ஆனாலும்...
- Get link
- X
- Other Apps
முன்பொரு காலத்தில் வயல்வெளி தோப்பு,ஓடை பூமி,மற்றும் ஒவொரு காட்சியும் சொர்க்க ஒளியை ஆடையாய் அணிந்திருந்தது எனக்குத் தெரிந்தன மகத்துவமும் புத்துணர்வும் மிகுந்த கனவு. அன்றுபோல் இன்றில்லையே - எங்கெங்கு காணினும் , இரவோ பகலோ இப்போது நான் பார்ப்பது இனிவரும் காலத்தில் காணவே முடியாது வானவில் வருகிறது போகிறது என்ன அழகு இந்த ரோஜா: நிலாதான் எத்தகைய உவகையுடன் சுற்றுமுற்றும் பார்க்கிறது வானம் வெறுமையிலிருக்கையில் விண்மீன்களோடு விளங்கும் இந்த இரவில்தான் தண்ணீர்தான் என்ன அழகு-என்ன வனப்பு காலையில் சூரிய ஒளியின் பிறப்பே அற்புதம் ஆயினும் பூமியினின்று பரவசநிலை பறந்ததே! பறவைகள் மகிழ்ச்சியில் இப்போது பாடும் ஆட்டுக்குட்டிகள் தமுக்கடிக்கும் ஓசையில் கட்டுண்டு கிடக்கும்- எனக்குமட...
- Get link
- X
- Other Apps
நான் உன்னை நேசிக்கவில்லை ஏனெனில் -உன்னை மட்டுமே நேசிக்கிறேன் உன்னை நேசிப்பதிலிருந்து நேசிக்காமலும் இருக்கிறேன் உனக்காக காத்திருந்து காத்திராமலும் இருக்கிறேன் எனது இதயம் குளிர்ச்சியிலிருந்து உஷ்ணமாய் ஆகிறது நான் உன்னை மட்டும் நேசிக்கிறேன் ஏனெனில் உன் ஒருத்தியையே நான் நேசிக்கிறேன் உன்னை வெறுக்கிறேன் ஆழமாகவும் -வெறுத்துக்கொண்டே தலை வணங்குவேன்-என் மாறுபடும் நேசிப்பின் அளவுகோல் உன்னைப்பார்க்காவிடினும் கண்மூடித்தனமாய் நேசிப்பதுதான் ஜனவரி மாத ஆதவனின் ஒளியில் என் இதயம் அதன் கடுமையான கதிர்களால் விழுங்கப்பட்டு எனது உண்மையான அமைதியும் களவுபோகும் கதையின் இக்கட்டத்தில் நான் தான் மறைந்துவிடுவேன் நான் ஒருவனே-உன்னை நேசிப்பதால் தான் மறைந்துவிடுவேன் ஏனெனில் உன்னை வெப்பத்திலும் எனது ரத்த அணுக்கள் ஒவ்வொன்றிலும் நேசிப்பதால் , Based on Pablo Neruda's I do not love you except because I love you. புலியே புலியே ஒளிர்ந்திடும் புலியே காட்டிடை இரவினில் ஒளிர்ந்திடும் புலியே செய்யமுடியா எந்தக்கரம் -எந்தக்கண் உனது அச்சம் தரும் அளவான உடலைப் படைத்தது? தொலைவிலுள்ள பூமியிலா வ...
- Get link
- X
- Other Apps
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C...
- Get link
- X
- Other Apps
சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு- சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என் று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்" கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின் ...