நான்மாடக் கூடல் நகரின் மையத்தில் மீனாட்சி கோயில் மட்டுமல்ல --அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் கூடலழகர் கோயிலும் இருப்பது சிறப்பல்லவா?பெரிய கோயில் என்றும் சொல்லமுடியாது-சிறிய கோயில் என்றும் கூறமுடியாது---பெருமாள் இங்கு உறையும் அழகுமிகு கூடலழகர் ஆலயத்தை. எதிரே மண்டபமும் ஸ்ரீ ஹயக்ரீவருக்கான சிறிய ஆலயமும்.எந்நேரமும் விஷ்ணு பக்தர்கள் ஏராளமான வடநாட்டு யாத்திரிகர்கள் வந்த வண்ணம் இருக்கும் சிறப்புமிகு ஆலய ... ம். வாயிலில் யானையைச் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தவுடன்-துவிஜஸ்தம்பம்-தரையில் விழுந்து சேவித்துவிட்டு-அருகே இருக்கும் தும்பிக்கை ஆழ்வார் தரிசனம். பெருமாள்கோயிலாதலால் முதலில் தாயாரைத் தரிசிக்க இடப்புறம் வாயிலைக் கடந்து ஸ்ரீ சக்கரத் தாழ்வார் சன்னதியில் மனமுருகப் பிரார்த்தனை-" சஹ்ராதித்ய சங்காஸம் சஹஸ்ர வதனம் ப்ரபும்" -அப்படியே அவருடன் இணைந்த ஸ்ரீ யோக நரசிம்மரய்த் துதித்த வண்ணம் வலம் வருகிறோம்-எப்படிப்பட்ட எதிரிகளும் நமக்குத் தீமை செய்யாவண்ணம் இவர்கள் உபாசனை உதவுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்-எதிரிகள் எனில்-காரணமே இல்லாமல் நம்மை பயமுறுத்தும் எண்ணங்களைத் தான் ...
Posts
Showing posts from January, 2018
- Get link
- X
- Other Apps
லால்குடியில் ஒன்றாவது முடித்துவிட்டு, மதுரை தல்லாகுளம் ஆரம்பப் பள்ளியில் இரண்டாவதும் , மூன்றாவதும் படித்தேன்-1956 -58 களில்.லால்குடியின் வயல்வெளிகளும் ஊரின் நடுவே ஓடும் ஓடைகளும் இன்னும் என் நெஞ்சில் அழகிய ஓவியமாய் அலங்கரிக்கின்றன.தல்லாகுளம் ஏரி, அதையும் தாண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ,சாலையின் இருபுறமும் நெடிய மரங்களும் -பறவை ஒலிகளும் என்ன சாதாரண இயற்கைச் சித்திரங்களா? அந்த மிகச் சிறிய வயதில் நான் ப ... டித்த - தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க, தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ. என்னை மிகவும் கவர்ந்த பாடல்.இலக்கிய உணர்வுகளுக்கு வித்திட்ட இனிய கம்பன் பாடல் அது-அந்தக் காலத்தில் இரைந்து தான் படிப்போம் -எந்த சப்ஜெக்ட் ஆக இருந்தாலும் சரி.சலிக்காமல் வெறுக்காமல் படிப்போம்-அதிகமாக வானொலிப் பாடல்கள்தான் சில சமயங்களில் டிஸ்ட்ராக்ஷன். பள்ளிக்குச் செல்வதும் வருவதும் சுகமான அனுபவங்கள். மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்கள் நிறையபேர் எனக்கும், மணிக்கும் வகுப்புத்தோழர்கள்...
- Get link
- X
- Other Apps
மாத நாவல்கள் தமிழிலும் வெளிவருகின்ற காலம் அது.கேட்கவேண்டுமா உற்சாகத்திற்கு?எத்தனை நூல்கள் படித்து மகிழ்ந்திருப்போம்-அவைகளை பற்றி பேசுவோம் -அவைகளில் வருவோர் போவோரை எண்ணி வருந்தியுமிருப்போம்?பள்ளி,கல்லூரிகளை மூடிவிட்டால் போதும் ,உடனே படித்தபுத்தகங்களை சிறிதுசிறிதாக எடுத்துக் கொண்டு நியூ சினிமா அருகில் உள்ள பழைய புத்தகக்கடைகளுக்குச் சென்று ,மல்லுக்கட்டிப் பேரம் பேசி பணத்தை வாங்கித் தான் சினிமா பார ... ்ப்போம்-சித்திரைப் பொருட்காட்சிக்குப் போய் ஜெயண்ட் வீலில் சுற்றுவோம். நியூ சினிமா அருகே செல்லப் பஸ் எல்லாம் பிடித்துக் கஷ்டப் படமாட்டோம்-வீட்டுக்குப் பின் நடந்துபோய் ஆற்றில் இறங்கிச் சிந்தாமணிக்குப் பின்புறம் படித்துறையில் ஏறி-அப்படியே-மீனாட்சி கோயில் வந்து-பழையபுத்தகக் கடையை அடைந்து விடுவோம்.மதுரையை அப்படிப் பலநாட்கள் வலம் வந்திருக்கிறோம். அதேபோல் வீட்டில் எனக்கு அடுத்துப்பிறந்து வளர்ந்த விஜி, சங்கர், பவானி எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்துப் போகும் அபூர்வ வாய்ப்புகளையும் விடமாட்டேன்-மணி கொஞ்சம் சொகுசுப் பேர்வழி-கிருஷ்ணா -"நீ கூட்டிப் போய்ட்டுவா '" -என்று உத்தரவு போட்டுவி...
- Get link
- X
- Other Apps
நானறிந்த மதுரை என்று என்றோ நடந்ததை எழுதிவருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கிறது .அவரவர்களுக்கு அவரவர் ஊர் அதே மகிழ்ச்சியைக் கொடுக்கும்-இதில் மதுரை ஓர் குறியீடு! எதிர்காலம் பற்றி நான் சென்றகாலங்களில் சிந்தித்ததே இல்லை-இன்றளவும் கூட.இதற்கும் மதுரை மண்ணும், காற்றும் கூடக் காரணமாயிருக்கலாம்.மதுரையின் மகத்துவம் அத்தகையது என இப்போது பலவற்றிலும் படித்து வருகிறேன்.போராட்டக் காரனாகச் சில காலமே வாழ்த ... ேனாகிலும் -உண்மையாகவே நான் அந்த வழிமுறைகளுக்கு இருந்தேன் என்பது என் நண்பர்களுக்குத் தெரியும்.எனினும் மதுரையை விட்டுவிட்டுச் சென்னைக்குச் சென்று செட்டில் ஆனபின் நான் மறைந்துவிட்டேன் என் அனைத்து நண்பர்களிடமிருந்தும்.அதையும் உலகநியதியாகவே பார்க்கிறேன். மதுரையின் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றுதான் தியாகராஜர் கல்லூரி.மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு எதிரே அமைந்துள்ள இக்கல்விச்சாலை ஏராளமான நல்ல சிறந்த உள்ளங்களை உருவாகிவிட்டிருக்கிறது.இங்குதான் நான் பட்டப் பின்படிப்பு-எம்.ஏ-படித்தேன் ஆங்கில இலக்கியத்தில்.பேராசிரியர் டீ.வி. சுப்பாராவ் என்றோர் சான்றோரது வகுப்பில்பயின்ற மாணவன் என்று வா...
- Get link
- X
- Other Apps
காட்டுக்குத் துரத்தி அடிக்கப்பட்டு என்னோடு வாழும் தோழர்களே-சகோதரரே-இவ்வரிய காட்டு வாழ்க்கை நம் அரசபோக படாடோப வாழ்க்கையைவிட இனிமையாக இருக்கிறது அல்லவா?இம்மரங்களிடம் ஏது அரசவை காழ்ப்புணர்ச்சிகளும் ,சதித்திட்டங்களும்?இக்காட்டிடை நாம் பருவ மாற்றங்களை நன்கு உணர்கிறோம்-நம்மை அவை பாதிப்பதில்லை.பனிக்கட்டிப் பொழிவுகள் , உறுத்தும் காற்றின் கடிகள் -அடிகள் என் மீது விழுந்தாலும்-என் உடல் குளிரில் நடுங்கினாலும ... ், என்னால் கால நிலையின் இயக்கத்தைப் பாராட்டமுடிகிறது.சிரித்தவாறே என் சிந்தனை இப்படிச் செல்கிறது: நன்றி உரித்தாகுக-நல்ல காற்றுக்கு-என்னை அவை துதித்துப் பாடாது;எனக்கு அறிவுரைகூறி என்னையே உணரவைக்கும் நல்லாசிரியன் போன்று;தீமைமிகு காலமும்கூட நன்மையையும் பயக்கும்-எப்படி கோரவடிவமுள்ள தேரை தன் தலையில் ஒளிவீசும் கற்களைக் கொண்டுள்ளதோ-அதுபோல்!இவ்வரிய வாழ்க்கை-நாகரிக உலகினின்று வெகு தொலைவில் இருந்தாலும்-இம்மரங்களின் மொழியைக் கேட்கமுடிகிறது,ஓடிவரும் ஓடைகளில் நூல்வரிகளைப் படிக்கமுடிகிறது,பாறைகள் பகர்ந்திடும் ஞானச் சொற்களை செவிமடுக்கமுடிகிறது-மேலும் நல்லன எல்லாம் காட்டும் அனைத்துப் பொருட்களையும் கண்டு...
- Get link
- X
- Other Apps
மரங்களிடையே பனிமழை பொழியும் மாலை வேளையில் நின்று .. .....ராபர்ட் பிரோஸ்ட் எவருடைய காடு இது -எனக்குத் தெரியுமென்றெண்ணுகிறேன் அவரது வீடு அந்த கிராமத்தில் இருக்கிறது நான் இங்கு நின்றிருப்பதை அவரால் பார்க்க இயலாது அவர் இடம் பூரா பனியில் மூடி இருப்பதை பார்க்கிறேன் ... என் குதிரைக்கு கூட இது விநோதமாகத் தோன்றும்- நான் பண்ணைவீட்டருகே நிற்காமல் இங்கே இருப்பது இக்காட்டுக்கும் உறைபனிசூழ் ஏரிக்கும் இடையே - இவ்வருடத்தின் மிகக் கரிய இம்மாலையில் இங்கிருப்பது குதிரையோ தன் கழுத்துக் கயிற்று மணிகளை ஆட்டுகிறது- ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ என்று கேட்பது போல் வேறு வரும் ஒரே ஓசை காற்றின் ஓசையே மெல்ல மெல்ல வருகிறது, கூடவே பொழியும் பனித்துகள்கள் ! இக்காடுகள்தான் அழகானவை ,கரியவை, அடர்த்தியானவை நானுமே பலப்பல வாக்குறுதிகள் நிறைவேற்றவேண்டும் இன்னும் செல்லவேண்டிய தொலைவோ அதிகம்-உறங்குமுன் இன்னும் செல்லவேண்டிய தொலைவோ அதிகம்-உறங்குமுன்
- Get link
- X
- Other Apps
"இன்னுமா இங்கு..லயர்ட்டெஸ் -விரைந்து ஏறு..காற்று வசதியாக உன் கப்பலின் பாய்மரத்தை நகர்த்துகிறது.,,அனைவரும் உனக்குத்தான் காத்திருக்கிறார்கள்.மீண்டும் உனக்கு என் ஆசிகள்!வாழ்க்கை பற்றிய சில சிந்தனைகள் உன் சிந்தையில் புகட்டும்-நினைக்கும் எல்லாவற்றையும் பேசிவிடாதே.நினைப்பதையெல்லாம் செயல்படுத்தவும் துணியாதே.அனைவருடனும் நட்பு பாராட்டு-ஆயினும் எவருடனும் மிகையாக பழகவேண்டாம். நட்பின் நம்பிக்கையைப் பரிசோதித் ... து உண்மையானவர்களை நெஞ்சோடு ஒட்டிக்கொள்.பார்க்கும் எல்லோருடைய கரங்களையும் குலுக்கி வீணடிக்காதே.சண்டை ஏதும் நீயாகத் துவங்காதே-ஆயினும் வந்துவிட்டால் எதிராளி உன் வலிமைக்கு கட்டுப்படட்டும். அனைவரது சொற்களையும் செவிமடு-அனால் சிலரிடமே உன் சொற்களைக் கொடு.பிறர் கருத்துக்களைக் கேள்-ஆனால் தீர்ப்பு மட்டும் உன்னோடே இருக்கட்டும்.உனது ஆடைகளுக்கு நன்கு செலவழி-பகட்டை விடவும் நேர்த்தியாக அவை இருக்கட்டும்-ஏனெனில் ஆடையே ஒருவனை அடையாளம் காட்டுகிறது.-அதுவும் நீ செல்லும் பிரான்சில் மிக மிக அவசியம் அது.ஒருபோதும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதே..நண்பனுக்கு உதவப்போய் நட்பையும் பொருளையும் சேர்த்து...
- Get link
- X
- Other Apps
காஷீஅஸ் :மன்னியுங்கள் சீசர்!மன்னியுங்கள் அவனை!உங்கள் கால்களில் விழுகிறேன்...புபிலிஎஸ் சிம்பருக்கு மீண்டும் குடியுரிமை வழங்கக்கோரி இறைஞ்சுகிறேன்! சீசர்:நீயாக நான் இருப்பின் அது நடக்கலாம்.அடுத்தவரைக் கெஞ்சி அவர் மனதை மாற்றவிழைவதைவிட இரத்தலேகூட மேல்.நானோ வட துருவம் போன்றவன்-அதன் ஸ்திரமான தன்மைக்கு எந்த விண்மீனும் ஈடாகாது.வானம் எண்ணமுடியா எத்தனையோ விண்மீன்களைக் காட்டலாம்-அவைகள் தீயாலானவை-ஒளிர்பவை-ஒ ... ன்றுமட்டுமே நின்று நிலைத்து ஒளிர்கிறது-அதுபோன்றே இப்புவியிலும்-எத்தனை மனிதர்கள் இங்கிருப்பினும் ஒருவனைமட்டும் எவரும் தாக்கமுடியாது-அவன் தனது நிலைப்பாடை விடமாட்டான்-அதுவே நான் என்றறி!சிம்பர் கதையும் அப்படிதான்-அவனை நாடு கடத்தியதில் எந்த மாற்றமும் நான் அனுமதியேன்-அதில் நான் உறுதியாக இருப்பேன்! சின்னா:(மண்டியிட்டு):ஓ சீசர்! சீசர்:போதும் ! உன்னால் ஒலிம்பஸ் மலையைத் தூக்கமுடியுமா? டீஸிஸ்:(மண்டியிட்டு): மாபெரும் சீசர்! சீசர்:மண்டியிட்ட புரூட்டசுக்குக்கூட நான் அனுமதி மறுத்தேன்! காஸ்கா:எனது கரங்கள் எனக்காகப் பேசும்- (காஸ்கா மற்றும் சதிகாரர்கள் சீசரை குறுவாட்களால் குத்துகின்றனர்!-புரூட்ட...
- Get link
- X
- Other Apps
Tintern Abbey -Lines-Wordsworth...தழுவல் ... ஐந்து ஆண்டுகள் போயின-ஐந்து கோடை களும் ஐந்து நீண்ட குளிர்காலமும்-மீண்டும் நான் கேட்கிறேன் இந்நதியின் ஓசையை-மலைகளின் ஊற்றுக்களிலிருந்து புரண்டு ஓடுது-மெல்லிய உள்ளூர் இரைச்சலுடன்-மறுபடியும் உயர்ந்த கூர்மைமிகு மலை உச்சிகளைப் பார்க்கிறேன்- ... தனிமையின் காட்சிப்பொருளாய் விளங்கும் இவைகள் இன்னும் கொடிய தனிமை உணர்வை மனதில் ஏற்படுத்துகின்றன, இவ்வரிய படத்தோடு வானத்தின் மோனமும் புலப்படுகிறது, மீண்டும் நான் ஓய்வெடுக்கும் தருணமிது -இங்கிருந்து சிக்கமோர் மரங்களையும் கண்டு-அருகே காட்டு வெளியினில் ஆங்காங்கே குடிசைகளை ,,ஆப்பிள் தோப்புக்களை-காய்த்துக்குலுங்கும் கனிகளையும் -அனைத்தும் பச்சை வண்ணத்தில் கொத்துக் கொத்தாக பார்க்கிறேன் -இவைகளோடு சுருள் சுருளாகப் புகையும் வருகின்றன- எந்த நாடோடியின் எளிய இல்லத்திலிருந்தோ-சாமியாரின் குகையிலிருந்தோ அவை வரலாம்-எந்த யோகி தனியே அங்கு சமாதியிலிருக்கிறாரோ! இவ்வழகிய காட்சிகளை நான் பல ஆண்டுகள் கழித்தே கண்டாலும் பெருநகரங்களில் தனி அறையினுள் -பார்வையற்றோனுக்கு கிடைத்த காட்சிபோல் அல்ல- சந்தடிகளுக்கும் கூச்சல...
- Get link
- X
- Other Apps
(based on )Ode on Grecian Urn by John Keats நீதான் நிசப்தத்தின் கன்னிகழியா மணமகள் மெல்லநகரும் காலத்திற்கும் மௌனத்திற்கும் வளர்ப்புச் சிசு- பசுமையின் வரலாற்றாசானே உனைவிடவும் அழகிய கதை சொல்லி எக்கவிதை இசைக்கும்? உன் வடிவம்தாங்கிஇருக்கும் காவிய ஏடுகள்தாம் என்ன? ... ஆங்கே தென்படுவோர் தேவர்களா மனிதர்களா-இருவருமா? ஆற்கடிப் பள்ளத்தாக்கா -டெம்பிளுள்ளோரா? எவரே அந்த மனிதர்கள்-கடவுளர்கள்?கன்னியரின் நடமாட்டங்கள்? எத்தகைய காம லீலைகள் ? எப்படியான போராட்டத் தவிப்புகள்? என்னென்ன ஊதுகுழல்கள்?,மத்தளங்கள்?அடடா-என்ன களியாட்டங்கள்? கேட்ட பாடல்கள் இனிமையானவையே-ஆயினும் கேளாளதோ மிகமிக இனிமைதான்-எனவே மென் குழல்களே ஊதுங்கள் இவ்வுணர்ச்சிமிகுச் செவிகட்கு அன்று-இன்னும் மனதுக்கு உவந்த ஊதுகுழலே வடித்திடுவீர் வரம்பற்ற காற்றில்கலக்கும் கீதங்களை- கவர்ச்சிமிகு இளைஞர்காள் மரங்களடியைவிட்டு எங்கு செல்வீர் உம் பாடல்களை விடுத்து?அம்மரங்களும் உதிரா இலைகளுடன் என்றும்! வீரமிகு காதலர்காள்-முடியாது முடியாது உம்மால் முத்தமிட- வெல்வதுபோல் தோன்றிடினும் -முடியாது-ஆயினும் வருந்தற்க- உன் காதலி ஒருநாளும் மூப...
- Get link
- X
- Other Apps
தமிழில் ஜான் கீட்ஸின் அழகு கவிதை! Based on John Keats' Ode to a nightingale-- என் இதயம் வலிக்கிறது-என் உணர்வுகள் மரத்துவிட்டன -ஏதோ விஷம் குடித்தாற்போல் அல்லது அபினை அருந்தியது போலவும் - இல்லை லித்தி நதியில் மூழ்கியதுபோலவா? இப்படி இருப்பது உன் மகிழ்ச்சியில் பொறாமை கொண்டா- ... குயிலே-உனது களிப்பில் நானும் மகிழ்ந்திருந்ததாலா? மென்மையான சிறகுகள் கொண்ட தேவதையே ! ஓ பச்சைப்பசேல் பீச்சென் மரங்களில் அமர்ந்து இக்கோடையில் முழு வீச்சில் நீ பாடுவதைக் கேட்பதாலா? நெடுநாள் பூமிக்கடியில் குளிர்விக்கப்பட்ட மதுரசம் ஓர் கிண்ணத்தில் ஏத்திப் பருக ஆசை அதுதான் பூக்களின் -நாட்டுப்புறச் செடிகளின் வாசத்தோடு சுவைக்கும்-ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்! கதகதப்பான தென் பிரெஞ்சு மது ஓர் பாட்டில் நிறைய - ஆஹா-ஹிப்போக்ரின் நிறத்தில் -கிறங்குகிறேன்!- முத்துமுத்தாய் உருண்டு திரண்டு நிரம்பி வழியும் ! இதழ்களெல்லாம் சிவப்பு நிறமாகி -நான் குடிப்பேன் இவ்வுலகிடமிருந்து வெகு தொலைவு செல்வேன்- உன்னோடு மறைந்துவிடுவேன்-காட்டுக்குள்ளே! மறைவேன் வெகுதொலைவில்-கரைவேன்-மறப்பேன் நீ இலைகளுக்கு நடுவே ...
- Get link
- X
- Other Apps
மலைகள்-பள்ளத்தாக்குகள் மேல் அலைந்து திரிகிறேன் தனிமையில் மேகத்தைப்போல்- அப்போதுதான் பொன்னிற டாபோடில்ல்ஸ் மலர்களை கொத்து கொத்தாய் பார்த்தேன்- ஏரிக்கரைக்கருகே- மரங்களடியில் அசைந்து அசைந்து அவை ஆடிக்கொண்டிருந்தன! ... பால்வீதியில் கண்கள் சிமிட்டி என்றுமே ஒளிரும் விண்மீன்களை போல் டாபோடில்ஸ் பரந்து படர்ந்து கிடந்தன- ஏரியின் வளைகுடா ஓரத்தில் - அடடா-பத்தாயிரம் மலர்களைக் கண்டேன்- தத்தம் தலைகளை குதித்துக் கூத்தாடின! ஏரியின் அலைகளும் ஆடின -ஆயினும் மலர்கள் ஆட்டமோ மேலும் அழகுடன் இருந்தன எந்தக் கவி இதுபோன்ற மலர்களின் கூட்டத்தில் களித்திருக்கமாட்டான்? பார்த்தேன் உற்று உற்றுப் பார்த்தேன்-சிறு சிந்தனை- இக்காட்சி எனக்கு என்ன இன்பம் கொடுத்தது? பலமுறை என் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கையில் வெறுமையான-அல்லது வருந்திய மனநிலையில்- அம்மலர்கள் பளீரென அகக்கண்ணில் பளிச்சிட்டன! அதுவல்லவா தனிமையின் பேரினிமை எனப்புரிந்தது இதயம் மகிழ்ச்சியில் ததும்பித் திளைத்தது- மலர்களோடு அசைந்து ஆடி இன்புற்றது! From Wordsworth's Daffodils..
- Get link
- X
- Other Apps
ஜூலியட் மேலே ஜன்னல் அருகேத் தோன்றுகிறாள்- ஆ-மெல்ல மெல்ல-அந்த ஜன்னலருகே என்ன ஒளி வெள்ளம் பார்க்கிறேன்! ஓ அதுவே கீழ்த்திசை-ஜூலியட் தான் சூரியன்! உதித்துவிடு ஆதவனே-கொன்றுவிடு நிலவை, ஏற்கனவே நிலா நோயுற்று-வெளுத்து-வருத்தத்தில்- ஏனெனில் நீயோ ஜூலியட் ,அவளது தாதி-ஆனால் ... அவளைவிடவும் அழகு மிக்கவள்-ஆகவேதான் உன் மீது பொறாமை அவளுக்கு! அவளது நெடுநாள் கன்னித்தன்மையே அவளை இவ்வாறு மெலியவைத்தும் உடல்நலம் குன்றியும் காட்டுகிறது- மூடர்களூக்கு உரித்தான குணம் அது! தூர அதை எறிந்துவிடு- ஆஹா-என் கண்ணே!-என் காதலியே! அவளுக்கு மட்டும் நான் இங்கிருப்பது புலப்படுமானால்! அவள் பேசுகிறாள்-எனினும் ஒன்றும் சொல்லாதிருக்கிறாளே! அதனாலென்ன? அவளது கண்கள்தான் பேசுகின்றனவே!-நான் பதிலளிப்பேன்- என் தைரியத்திற்கு என்ன குறை? என்னிடம் அவள் பேசவில்லையே- வானத்தின் இரு ஒளிமிக்க விண்மீன்கள் ஏதோ பணியில் சிக்கி-ஜூலியட்டின் கண்களை சற்றே வான வீதியில் உலவ வைத்தார்களோ-அவைகள் திரும்பிவரும்வரை! விண்மீன்கள் அவள் முகத்திலும்- அவளது கண்கள் வானத்திலும் இருந்தாலென்ன? அவளது கன்னங்களின் செவ்வண்ணம் அவ்விண்மீன்களை வ...
- Get link
- X
- Other Apps
உலகமே ஓர் நாடகமேடை-ஆண்,பெண் -அனைவரும் நல்ல நடிகர்களே! அனைவரும் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் - ஒவ்வொருவரும் பலபலப்பாத்திரங்களில் நடிப்பவர்கள்தாம்! ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏழு பகுதிகளாக இருக்கும்- முதன் முதலில்-குழந்தையாக-அழுதும் சிணுங்கியும் செவிலியர் கரங்களில்-அடுத்து அடம்பிடிக்கும் பள்ளிச் சிறுவனாக- கையில் புத்தகப் பையுடன் பால்வடியும் முகத்துடன்- ... பள்ளிக்கு வேண்டாவெறுப்புடன் நத்தைபோல் ஊர்ந்து செல்வான், அடுத்துக் காதலனாக-ஊது உலைபோன்று பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டும்-காதலியின் முக எழிலைக் குறித்துக் கவிதை எழுதியும் - நான்காம் பகுதியில் வீரனாகப் பரிணமித்து-வாய் நிறைய வீர வசனத்துடன்- சிறுத்தையின் தாடியோடு-எப்போதும் தனது மானத்தைக் காப்பதில் குறியாக- குமிழ்போல் உடையும் புகழுக்காகப் போர்க்களத்தில் பீரங்கிகளுக்குமுன் தனது வாழ்க்கையையே பணயம் வைக்கும் நிலையில்! ஐந்தாவது பகுதியில் ஒரு நீதிபதி நிலையில்-லஞ்சலாவண்யத்தை அடையாளம் காட்டும் தொந்தி தொப்பையுடனும்-கண்களில் கடுமையை வரவழைத்தும்-நன்கு வெட்டிய தாடியுடனும்- அறிவாழம் மிக்கச் சொற்களுடனும்-சமீபத்திய சம்பவங்களை சுட்டிக்காட்டிக...
- Get link
- X
- Other Apps
அதோ சுவரில் ஓவியமாய் நிற்பவள்தான் என் முந்தைய சீமாட்டி - உயிரோடு இருப்பதுபோலில்லை? அற்புதமான படைப்பு-பிரா பண்டாலின் கரங்கள் ஒருநாள் முழுவதும் கடுமையாய் உழைத்தன-அவள் நிற்கிறாள்- இங்கே அமர்ந்து அதைக் கவனி- ... திட்டமிட்டே அந்த ஓவியனை வரச்செய்தேன்: அம்முகத்தின் அழகை உன்னைப்போன்றோர் புரிவது இயலாது-அவனால் மட்டுமே முடியும்- அந்தமுகத்தின் ஆழத்தையும் அதீத உணர்ச்சிகளையும் அவனாலேயே கொணர்ந்திடல் கூடும்- என்னைப்போன்ற சீமானின் அண்மையாலே அந்த உணர்ச்சி அவளால் கொடுக்கமுடியும்-அல்லது ஓவியரே அவளணிந்த ஆடையைத் திருத்தச் சொன்ன வெட்கத்திலோ-அல்லது அவள் அழகைப் புகழ்ந்ததாலோ- "வண்ணமெல்லாம் உன் ஏழிலைக் காட்டுவது கடினமென்று"சொல்லியிருப்பார்- அதுவே அவள் கன்னத்தின் சிவப்பைக் கூட்டியிருக்கலாம்! அவளுக்கு இருந்த இதயம்--என்ன சொல்வேன் அதுகுறித்து? எளிதில் மகிழ்ச்சிவயப்படும், விரைவில் த்ருப்தியுறும்- அவள் பார்த்திருப்பாள்-அவள் பார்வை எங்கணுமிருக்கும்- அந்திமயங்கி வெளிச்சம் மேற்கே குன்றுகையில் , கொத்தாக செரிப்பழத்தை தோட்டத்தில் புகுந்து தன் விவாசத்தைக் காட்டும் ஒருவேலையாளிடமும் அவள் சவாரி செய்யும் வெள்ளைக் கோவ...
- Get link
- X
- Other Apps
நற்குணத்துடன் வாழ்ந்தோர் உயிர்பிரியும் போது தங்கள் ஜீவனிடத்தில் மெல்லச் சொல்லி விடைபெறுவர் அப்போது வருத்தமுறும் நண்பர் சிலர் சொல்வர் - "மூச்சு இப்போது நின்றது"- "இல்லை,இல்லை"-வேறு சிலர். அதுபோல் நாம் உருகி மறைவோம் -சப்தம் ஏதுமின்றி- மடைவெள்ளமெனக் கண்ணீரோ-பெருமூச்சுப் புயலோ இன்றி- ... நமது இன்பத்தைக் கொச்சைப் படுத்துவதே -காதலியிடம் நம் அன்பையெல்லாம்பற்றி வெளிப்படையாகச் சொல்வது பூமியின் அதிர்ச்சி என்றும் தீங்கையும் துன்பமும் தரும் மானிடர்க்குப் புலப்படும் அதன் செயலும் பொருளும் பிரபஞ்சத்தில் இன்னும்பெரிய கோள்கள் அதிர்வோ- ஏன் எந்தத் தீங்கும் நமக்கு உணர்த்துவதில்லையே மந்தமான மதி படைத்தோர் காதலெல்லாம் என்றும் பிரிவைப் பொறுப்பதில்லை -அவர்கள் ஆத்மா உடலிலே- பிரிவு அவர்களை இணைத்து வைத்த உடல்களைப் பிரிப்பது -எத்தகைய கொடுமையானது அவர்களுக்கு! நமது அன்பும் காதலும் பண்பட்டது-உயர்ந்தது நமக்கே அது சரியாகத் தெரியாது -புலப்படாதது நமக்குள்ளே நம் இதயத்தினுள் உறுதி செய்யப்பட்டது நம் கண்களோ-உதடுகளோ -கரங்களோ பற்றியதன்று நமது இரு ஜீவன்களும் அதனால் எப்போதும் ஒன்றே- நான் பிரியநேர்ந்தாலும் ப...
- Get link
- X
- Other Apps
நான் உன்னை நேசிக்கவில்லை ஏனெனில் -உன்னை மட்டுமே நேசிக்கிறேன் உன்னை நேசிப்பதிலிருந்து நேசிக்காமலும் இருக்கிறேன் உனக்காக காத்திருந்து காத்திராமலும் இருக்கிறேன் எனது இதயம் குளிர்ச்சியிலிருந்து உஷ்ணமாய் ஆகிறது நான் உன்னை மட்டும் நேசிக்கிறேன் ஏனெனில் உன் ஒருத்தியையே நான் நேசிக்கிறேன் உன்னை வெறுக்கிறேன் ஆழமாகவும் -வெறுத்துக்கொண்டே ... தலை வணங்குவேன்-என் மாறுபடும் நேசிப்பின் அளவுகோல் உன்னைப்பார்க்காவிடினும் கண்மூடித்தனமாய் நேசிப்பதுதான் ஜனவரி மாத ஆதவனின் ஒளியில் என் இதயம் அதன் கடுமையான கதிர்களால் விழுங்கப்பட்டு எனது உண்மையான அமைதியும் களவுபோகும் கதையின் இக்கட்டத்தில் நான் தான் மறைந்துவிடுவேன் நான் ஒருவனே-உன்னை நேசிப்பதால் தான் மறைந்துவிடுவேன் ஏனெனில் உன்னை வெப்பத்திலும் எனது ரத்த அணுக்கள் ஒவ்வொன்றிலும் நேசிப்பதால் , Based on Pablo Neruda's I do not love you except because I love you.
- Get link
- X
- Other Apps
சுறுசுறுப்பான கிழ மூடா , விவஸ்தயற்ற சூரியனே ஏன் இப்படி இதுபோல் ஜன்னல் வழியாக திரைசீலைகள் தாண்டி வருகிறாய்? உந்தன் அசைவுகளுக்கேற்ப காதலர் காமம் ஓடுமா? போக்கிரியான எலாம் அறிந்த உதவாக்கரையே-போய் சாடு தாமதிக்கும் பள்ளிச் சிறார்கள்-சலித்த பணியாட்களை! போய்ச் சொல் அரசு வேட்டைக்காரர்களிடம் -'அரசன் வருகிறான்' ... நாட்டுக்கட்டை அம்மாமார்கள் அவரவர் பயிர்களை அறுவடை செய்யட்டும் அனைவரையும் நேசி -ஒரே மாதிரி-இந்தப்பருவமும் ,நேரமும் மணித்துளிகளும்.நாட்களும் ,மாதங்களும் காலத்தின் கந்தல்தான! உந்தன் கதிர்கள் புனிதமானவை உறுதியானவை இதுபற்றி நீ ஏன் யோசிக்கிறாய்-சூரியனே ! என்னால் உன்னை மறைக்கவும் மறுக்கவும் முடியும்-ஓர் கண்சிமிட்டலில்! ஆனால் அவளை பார்க்காமல் ஏன் இருக்கவேண்டும்? அவளது கண்களின் ஒளியில் நீயே பார்வை அற்றுவிடுவாய் ! இங்கே பார்-நாளை பிற்பொழுதுகூட பதில் சொல்- அந்த மணமிகு இந்தியாவோ மேற்திசை இந்தியாவோ நீ விட்டுச் சென்றபோது எப்படியிருந்ததோ -அப்படியே இன்றும் நேற்று நீ பார்த்த அரசர்களை அனைவரையும் பற்றிக்கேள்- உனக்குத் தெரியவரும் -அனைவரும் ஒரே படுக்கையில்! அவளே எல்லா நாடுக...