Posts

BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் ... இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கர
Twelfth Night by William Shakespeare. ஆர்சினோ,கியூரியோ மற்ற பிரபுக்கள் வருகை-இசைக்கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருக்க- ஆர்சினோ:இசையே காதலுக்கு விருந்தாகும்-நன்கு பாடுங்கள்-எனக்கு அதிகமாகவே வேண்டும்- அளவுக்கு மிஞ்சி, நானே போதுமென்று சொல்லும்வரை---அந்த ராகத்தை மீண்டும் பாடுக-என்ன சோகம் ததும்பி! என் செவியில் தேனாய் இனிது கேட்கிறதே!கரையோர வயலெட் மலர்களின் மணம் போல்- மென் மேலும் எடுத்தும், கொடுத்தும் -போதும் போதும் -முன்பிருந்த இனிமை இப்போதில்லையே- காதல் தான் எத்தகைய விரைவில் மாறும் தன்மை கொண்டது!ஒரு நேரம் இனிக்கவும்,மறுபொழுது சலிக்கவும் செய்கிறதே!மிகப்பெரிய கடல்போல் விரிந்தும் -அதுவே எதுவும்கூடத் புகாமலும் இருப்பது விந்தையே! உயர்ந்துகொண்டே வந்தும் பின்னர் ஒன்றுமே இல்லாதுபோவதும் ஒரு நொடியில்!பற்பலவடிவங்கள் உடையதுதான்  கற்பனை -அதுவே ஜாலம் பல செய்யும் எதையும் அதனுடன் ஒப்பிடமுடியாது. கியூரியோ:வேட்டையாடச் செல்லலாமா, பிரபுவே? ஆர்சினோ:எதையென்று சொல், கியூரியோ. கியூரியோ:மானைத்தான்  ஆர்சினோ: அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் -என் இதயமானைத்தான் வேட்டையாடுகிறேன் , முதன்முதலில் ஒலிவியாவைப் பா
Srikrishnan Ku 27 September 2017 · Sion, India · அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்- தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை- அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் ! சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம் ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்! ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும் அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே! அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில் தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா? உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் - ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி - வசந்த காலத்திலும் எந்தக் குயிலும் கூடப் பாடியிருக்க இயலாது! எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என? கடந்தகால பழமையான நிகழ்வுகளா? யுத்தங்களா--அவளது துன்பகீதம் ? இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ? ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ? ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ? என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட
உன்னோடு நின்றவர்கள் தலையைத் தொங்கவிட்டு ,அனைத்திற்கும் உன்னையே காரணமாக்கும்போது உன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடியுமானால் அனைவரும் உன்னைச் சந்தேகிக்கையில் உன்னால் உன்னைநம்பமுடியுமானால் அதே சமயம் அவர்கள் அவநம்பிக்கையையும் சற்றே புரிய முடியுமானால் உன்னால் காத்திருக்கமுடிந்து அதனால் களைப்படைய முடியாமல் இருந்தால் உன்னைப் பற்றி பொய்கள் மலிய - நீ அப்போதும் பொய்களில் ஈடுபடாமல் இருந்தால் உன்மீது வெறுப்பு உமிழப்பட்டும் நீ வெறுப்புக்கிடம்கொடாமல் இருந்தால் நல்லவனாகக் காட்டிக்கொள்ளாமல் அறிவாளிபோல் பேசாமல் இருந்தால் உன்னால் கனவு காணமுடிந்தால் அனால் கனவே உன்னை ஆளாமலிருந்தால் நீ சிந்திக்க முடிந்தாலும் சிந்தனைகளே இலக்காகக் கொள்ளாமலிருந்தால் வெற்றி தோல்வியைச் சந்திக்கையில் அம்மோசடிப்பேர்வழிகளைச் சமமாக எதிர்கொண்டால் பேசிய உண்மை போக்கிரிகளால் திரிக்கப்பட்டு முட்டாள்கள் பொறியில் சிக்கக் கதைக்கப்பட்டால் வாழ்வுகொடுத்த லட்சியங்கள் சிதறுபட்டுத் துண்டு துண்டாக நீ வைத்துக்கொண்டு தொடங்க நேரிட்டால் நீ ஈட்டிய வெற்றிகளைப் பணயம் வைத்து இழந்து மீண்டும் துவங்க நேர்ந்தால் அந்த சமயத்திலும் உன் இ
சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு- சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என் று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்" கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின்
கனவிலும் நான் பார்க்கவொண்ணா கண்கள் இறப்பின் கனவு தேசத்தில் இவைகள் அங்கே தோன்றவில்லை இவைதாம் சூரியக்கதிர் துண்டுகளாய் அங்கே மரமே ஊஞ்சலாடுகிறது சொற்கள் காற்றின் இசையோடு வெகுதொலைவில் புனிதமானதாக மங்கி விடும் விண்மீன்களைப்போலே இங்கே நான் வேண்டாம் அருகாமையில் இறப்பின் கனவு தேசத்தில் வெளிப்படையான வேஷங்கள் களைகிறேன்-எலியின் ஆடை , காக்கையின் தோல், மாறுபட்ட தடிகளாய் வயல் வெளியில் காற்று ஊசலாடுகிறது எங்கோ அது இறுதிச் சந்திப்பன்று அந்திமயங்கும் தேசத்தில் W. B. Yeats. சுறுசுறுப்பான கிழ மூடா , விவஸ்தயற்ற சூரியனே ஏன் இப்படி இதுபோல் ஜன்னல் வழியாக திரைசீலைகள் தாண்டி வருகிறாய்? உந்தன் அசைவுகளுக்கேற்ப காதலர் காமம் ஓடுமா? போக்கிரியான எலாம் அறிந்த உதவாக்கரையே-போய் சாடு தாமதிக்கும் பள்ளிச் சிறார்கள்-சலித்த பணியாட்களை! போய்ச் சொல் அரசு வேட்டைக்காரர்களிடம் -'அரசன் வருகிறான்' நாட்டுக்கட்டை அம்மாமார்கள் அவரவர் பயிர்களை அறுவடை செய்யட்டும் அனைவரையும் நேசி -ஒரே மாதிரி-இந்தப்பருவமும் ,நேரமும் மணித்துளிகளும்.நாட்களும் ,மாதங்களும் காலத்தின் கந்தல்தான! உந்தன் கதிர்கள் புன
Image
HAPPY BIRTHDAY BABA! when where how? at 34 in1985 in Madurai at SatyaSai Nagar a neighbour gave a pic of SAI to frame till she got it back after framed I kept the pic on our wall we adorned it with a jasmine mala - to our surprise, the flowers withered not and grew and grew-what a miracle!'-mom soon we were taken to Sai at Kodaikanal He received a letter from me in which I wrote; "You appeared earlier in my dream and promised to help me realize myself-pl. endorse"-I was thrilled! a few years pass away I offered puja to Shirdi Sai Satya sai walked across ignored me with a smile -I understood-offered puja to Him- He came the next day not to go away I hold HIM tight till this minute- He never gives me up nor forsakes! Initially, I had less faith only- I spoke to a few in anger that I would ask Him about my doubts, fears and questions- the next day I was in His presence- the moment He cast His glance on me He came to stand in front of me to