1. அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்-
  2. தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை-
    அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் !
    சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம்
    ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் ...
    சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்!
    ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும்
    அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே!

    அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில்
    தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை
    எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா?
    உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் -
    ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி -
    வசந்த காலத்திலும் எந்தக் குயிலும்
    கூடப் பாடியிருக்க இயலாது!
    எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என?
    கடந்தகால பழமையான நிகழ்வுகளா?
    யுத்தங்களா--அவளது துன்பகீதம் ?
    இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த
    சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ?
    ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ?
    ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ?
    என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்?
    அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது-
    பணியினிடையும் கதிரறுக்கையிலும்
    பாடிய அவள் பாட்டில் அசையா சிலையாய் நின்றேன்-
    மீண்டும் மலைமீதேறி நடந்திடும்போதும்
    நெஞ்சமெல்லாம் படர்ந்தது அவ்வினிய இசை-
    வெகு காலம் ஒலித்து ஒலித்தும் ஓயவில்லை!
    Based on The Solitary Reaper by William Wordsworth.

Comments

Popular posts from this blog