- எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா!
தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே!
ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின-
ஒரு பறவையும் பாடுவதில்லை!
...
எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா!See more
ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்?
அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது-
அறுவடையும் நன்கு முடிவுற்றது.
உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு-
முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு -
சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு-
உன் பளபளக்கும் கன்னமெல்லாம்!
குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்!
அழகு அவள் அழகு -தேவதையைப்
பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி-
ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை!
அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன்
கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்--
பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து-
கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்!
எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம்
பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்-
ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்-
கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி !
ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும்
உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே!
புரியா மொழியில் விசும்பினாள்-உரைத்தாள்-
"நான் மிகமிக நேசிப்பது உன்னையே-உண்மையே "
வனதேவதை உலவிடும் குகைக்கே சென்றோம்
விம்மினாள்-விகாசித்துப் பெருமூச்செரிந்தாள்!
நானும் மயங்கி அவள் கண்களைப் பொத்தியே-
நான்குமுறை இனியவே முத்தமிட்டு மகிழ்ந்தேன்!
தாலாட்டித் தாலாட்டித் தூங்க வைத்தாள் என்னை
சுகமாக கிறங்கி உறங்கினேன்-என்ன கொடிய கனவு!
எல்லாம் போயிற்று-எல்லாமே போயிற்று-என்ன இது?
அந்தக் குகையினுள் குளிர்ந்த மலையருகே-
நோயுற்றோர்போல் வெளுத்துப்போன அரசர்களை
இளவரசர்கள் - பெரும் வீரர்கள்-சோகத்தில் பார்த்தேன்!
உரக்கவே கூவினர் என்னைப் பார்த்து-"அய்யகோ!
உன்னையும் சிறை பிடித்து விட்டாளே!"-என்றே..
அவர்களின் உலர்ந்த உதடுகளைக் கண்டு வருந்தினேன்
வாய்பிளந்து அச்சத்தில் நின்றனர் மங்கிய ஒளியில் -
கண் விழித்துப் பார்த்தேன்-இங்கே நிற்கின்றேன்-
குளிர்மிகு இம் மலையருகே- தன்னந்தனியே!
இதுவே இங்கு நான் உலவிவருவதின் நோக்கம்-
யாருமற்றும் நோயில் இருப்பவன்போல் -
ஏரிஓரச் செடிகளும் கருகின-ஏரியும் வற்றி-
யாதொரு பறவையும் பாடுவதும் கேட்கிலேன்!"
Based on John Keats' La Belle Dame sans merci.
நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...

Comments
Post a Comment